அகிலன் கருணாகரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அகிலன்
கருணாகரன்
முழுப்பெயர் அகிலன்
கருணாகரன்
பிறப்பு 29.02.1980
பிரித்தானியா
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து நாடகாசிரிய
பெற்றோர் கருணாகரன்,
இந்திராணி


அகிலன் கருணாகரன் (பிறப்பு: பெப்ரவரி 29, 1980) இலண்டனைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட ஈழத்துக் கலைஞர். இவர் நடிகர், நாடகாசிரியர். எழுத்தாளர்.

குடும்பம்

இவரது தந்தை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கருணாகரன். தாயார் பருத்தித்துறையைச் சேர்ந்த இந்திராணி. இளைய சகோதரன் ஐனகன்.

கல்வி

வெலிங்டன் விக்ரோறியா பல்கலைக்கழகப் பட்டதாரி

கலைத்துறையில்

இவர் கலையின் மேலிருந்த ஆர்வத்தால் நியூசிலாந்து நாடகப் பள்ளியில் இணைந்து நாடகத்துறையை பயின்றதோடு

நின்று விடாமல் பிரித்தானியாவுக்குப் பயணித்து இலண்டனில் உள்ள  நாடக நிறுவனமான Tara Arts உடன் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார். இதனூடாக ஜேர்மனி, அவுஸ்திரேலியா, நோர்வே, கனடா, இந்தியா ஆகிய நாட்டுக் கலைஞர்களுடனும் இணைந்து செயற்பட்டுள்ளார்.

அகரம்

இவர் அகரம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதனூடாக தெற்காசிய எழுத்தாளர்களை இணைத்து Aotearoaவில் விழா ஒன்றை நடாத்தியிருக்கிறார். இதனூடக Aotearoaவில் தெற்காசியாவின் எழுத்தாளர்கள் பங்குபற்றிய முதல் நிகழ்ச்சியை நடத்திய பெருமை அகரம் நிறுவனத்திற்குச் சேர்கிறது. இவர் உருவாக்கிய அகரம் நிறுவனம் தெற்காசிய எழுத்தாளர்களின் அபிவிருத்தித் தியேட்டர் நிறுவனங்களில் ஒன்றாக இன்றும் தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறது. இவர் Tawata என்ற நிறுவனத்தின் ஒரு துணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் 2019இல் Belvoir St Theatre தயாரிக்கும் நாடகத்தில் நடித்துக்கொண்டு Sydney Arts Festivalஇல் Auckland Theatre Companyக்காகவும் நாடகமொன்றை நெறியாள்கை செய்ய இருக்கிறார்.

அகிலனின் பங்களிப்பில் வெளியானவை

  • The Mourning After - Aotearoaவின் முதல் முழு நீள, சிறிலங்காவை மையப்படுத்திய நாடகம்
  • Anchorite
  • Light vs Dark (The Adventures of Rama)
  • Swabhoomi - Borrowed Earth[1]
  • Tea (குடும்ப நாடகம் - Auckland நகரில் நடந்த கலைவிழாவில்)

விருதுகள்

  • The Bruce Mason Playwriting விருது[2]
  • Auckland theatre award[3]

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அகிலன்_கருணாகரன்&oldid=4535" இருந்து மீள்விக்கப்பட்டது