அகிலன் கண்ணன்
Jump to navigation
Jump to search
அகிலன் கண்ணன் தமிழக எழுத்தாளரும்,[1] பதிப்பாளரும் ஆவார். இவர் எழுத்தாளர் அகிலனின் மகன் அகிலன் கண்ணன் ஆவார்.[2] மாணவப்பருவத்திலேயே 'தேன்மழை' இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர். தாகம் என்னும் பதிப்பகத்தின் நிறுவுநர்.
கல்வி
தனது பள்ளிக்கல்வியை கோபாலபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் கல்லூரிக்கல்வியை சென்னை விவேகானந்தர் கல்லூரியிலும் பெற்றார்.
நூல்கள்
- யந்திரங்கள் (சிறுகதைத்தொகுதி) 1992
- சுட்டும் விழிச்சுடர் (சிறுகதைத்தொகுதி)[3] 2006 திசம்பர்
- நெஞ்சோடு (சிறுகதைத்தொகுதி)
- புதிய பாதை (சிறுகதைத்தொகுதி)
- பட்டாம்பூச்சி (சிறுவர் இலக்கியம்)
- வேர்பிடிமண் (நீள்கதை)
- வெற்றிப்பாதை: வள்ளுவர் வழியில் (கட்டுரை)
- பழக்கத் தெரிந்துகொள்வோம் (கட்டுரை)
- பதிப்பும் படிப்பும் (கண.முத்தையாவோடு இணைந்து)
- அகிலனின் காசுமரம் - திரைக்கதை வசனம்
தொலைக்காட்சி
அகிலன் எழுதிய "நெஞ்சின் அலைகள் என்னும் புதினம் தொலைக்காட்சித் தொடராக உருவானபொழுது அதற்கு அகிலன் கண்ணன் திரைக்கதை, வசனம் எழுதினார். [4]
சிறப்புகள்
- தமிழ்நாடு அரசின் பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள துணைப்பாடநூலில் இவரது சிறுகதை ஒன்று பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
- இவரது சிறுகதைகள் ஆங்கில, வங்க மொழிகளில் மொழிபெயர்த்து வெளிவந்துள்ளன.
விருதுகள்
- அகில இந்திய அளவில் சிறந்த பதிப்பாளர் விருது.
- ‘நெஞ்சோடு’ சிறுகதைத் தொகுப்பிற்கு லில்லி தெய்வசிகாமணி விருது. இந்நூல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாடமாக விளங்குகிறது.
- அழ.வள்ளியப்பா நினைவு பதிப்பாளர் விருது.
பரிசுகள்
- போதைகள் (தினமணி கதிர் 1989 சனவரி), திருஷ்டிப் பரிகாரம் (குமுதம் 2002 பிப்ரவரி) ஆகிய சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனைப்பரிசு.[5]
- சிறுவர் சிறுகதைத்தொகுப்பு ‘பட்டாம்பூச்சி’க்காக பாரத ஸ்டேட் பாங்க் இலக்கியப் பரிசு .
நடுவர்
- கல்கி, கோகுலம், பாரத ஸ்டேட் பாங்க், முதியோர் கல்வி இலக்கியப் போட்டிகள் பலவற்றிற்கு நடுவர்.
குடும்பம்
எழுத்தாளர் அகிலன் மகனான கண்ணன், தமிழ்ப்புத்தகாலய நிறுவுநரான கண.முத்தையா மகள் மீனாவை மணந்துள்ளார். இவ்விணையருக்கு அபிராமி, உமா என்னும் இரு பெண்மக்கள் உள்ளனர். க.அபிராமி எழுத்தாளர்; உமா ஓவியர்.
வெளியிணைப்பு
- எழுத்தும் அனுபவமும் பிரிக்க முடியாததே! தினமலர் 2020-சனவரி-04
- குழலினிது - சிறுகதை குங்குமம் 2021 அக்டோபர் 03
மேற்கோள்கள்
- ↑ "வால்காவிலிருந்து கங்கை வரை: மலைக்க வைக்கும் அறிவுப் பெட்டகம்". தினமணி. https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&action=edit. பார்த்த நாள்: 2 June 2021.
- ↑ "அகிலனின் நாவல் எம்.ஜி.ஆர். படமான கதை...!". Dailythanthi.com. 2020-01-31. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ "சுட்டும் விழிச்சுடர் - அகிலன் கண்ணன் - அகிலன் கண்ணன், Buy tamil book Suttumvili Sudar online, akilan kannan Books, சிறுகதைகள்". udumalai.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
- ↑ அகிலன் திரைக்கதை - வசனத்தில் டி.எம்.சவுந்தரராஜன் நடித்த பட்டினத்தார் மாலைமலர் 2016 ஏப்ரல் 16
- ↑ இலக்கியச் சிந்தனை மாதத் தெரிவில் தெரிவான சிறுகதையாசிரியர்கள் 368