அகவிழி (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அகவிழி இலங்கை, கொழும்பு இராஜகிரியவிலிருந்து வெளிவந்த கல்வியியல் மாத சஞ்சிகையாகும்.[1]

நிர்வாகம்

ஆசிரியர்

  • கே. மதுசூதனன்

ஆசிரியர் குழு

  • சாந்தி சச்சிநாதந்தம்
  • ச.பாஸ்கரன்
  • காசுபதி நடராஜா

நிர்வாக ஆசிரியர்

  • மனோ இராஜசிங்கன்

ஆலோசகர் குழு

  • பேராசிரியர் க. சிவத்தம்பி,
  • பேராசிரியர் சபா ஜெயராஜா,
  • பேராசிரியர் சு. சந்திரசேகரன்,
  • கலாநிதி உசைன் இஸ்மாயில்
  • மா.சின்னத்தம்பி
  • கலாநிதி ப. கா. பக்கீர் ஜஃபர்
  • கலாநிதி ம. கருணாநிதி
  • தை. தனராஜா
  • உ. நவரத்தினம்

அலுவலகம்

49/1, மெதல்கடவீதி, இராஜகிரிய, கொழும்பு

முதல் இதழ்

விழி 1, பார்வை 1 என்றடிப்படையில் ஆகஸ்ட் 2004ல் வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று

ஆசிரியத்துவ நோக்கு

ஆசிரியர் தலைப்பு

முதல் இதழில் ஆசிரியர் தலைப்பில் ஆசிரியர். மதுசூதனன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் “இன்று தமிழில் பலவகையான துணைசார் பத்திரிகைகள் புதிதாக வெளிவர வேண்டும். அப்போதுதான் தமிழ் சிந்தனை புத்தாக்கம் பெற முடியும். புதிய சிந்தனை வளங்கள் தமிழில் ஊடாட முடியும். புதிய பார்வைகள் பிறக்கும். அவற்றால்தான் நாம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும். அதற்காகத் தான் அகவிழி”.

உள்ளடக்கம்

இவ்விதழில் நவீன கல்வி முறைகள் பற்றி, ஆசிரியர்கள் கடமைப்பாங்கு பற்றி, கற்றல் கற்பித்தல் நடைமுறைகள் பற்றி, ஆசிரியர்களின் வகிபங்கு அந்தஸ்து பற்றியும், கல்வியியலுடன் சார்ந்த பல தரமான ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. முதல் இதழ் 32 பக்கங்களைக் கொண்டிருந்தன. இவ்விதழ் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அகவிழி_(சிற்றிதழ்)&oldid=14794" இருந்து மீள்விக்கப்பட்டது