அகம்பன் மாலாதனார்
அகம்பன் மாலாதனார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர்.
அகம்பன் மால் ஆதன் ஆர். அகம்பன் என்பது இப்புலவரின் தந்தைப்பெயர். மால் தந்தை தன் திருமால் பற்றைத் தன் மகன் பெயரில் இணைத்து வெளிப்படுத்தியுள்ளார். ஆதன் என்னும் சொல் மூச்சுக்காற்றைக் குறிக்கும்.
இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியிலுள்ள அகமலை என்னும் ஊரில் வாழ்ந்தவர்.[1] அகமலையில் வாழ்ந்தவர் அகம்பன்.
இப்புலவர் பெயரில் ஒரே ஒரு பாடல் மட்டும் காணப்படுகிறது.
(அது நற்றிணை 81 முல்லை). வினை முற்றி மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்வதாக அப்பாடல் அமைந்துள்ளது.
மாலாதனார் பாடல் உரை
புரவி நிலத்தில் கொட்டி ஆதிதாளம் போட்டுக்கொண்டு செல்லும். அக்காலத்தில் அதனை வண்டியில் பூண்டும்போது அதன் பிடரியில் மணி கட்டுவர். அந்த மணி ஒலிக்கும்படி பாக! தேரில் பூட்டுக. வேந்தன் தன் பகைவனை வென்று தன்னைத் தணித்துக்கொண்டான். என் மனைவி அம்மா அரிவை விருந்தோம்ப முடியவில்லையே என்று அழுதுகொண்டிருப்பாள். அவள் புன்முறுவலைக் காணவேண்டும்.
சான்றடைவு
- ↑ கந்தையா பிள்ளை ந. சி., தமிழ்ப் புலவர் அகராதி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் சென்னை, 1952, பக்.4