அகத்தியர் ஞானப் பாடல்கள்
அகத்தியர் ஞானப் பாடல்கள் என்னும் நூல் சித்தர் பாடல்கள் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. [1] 49 பாடல்களைக் கொண்ட இந்த நூல் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பாடல் எடுத்துக்காட்டு
1
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே [2]
2
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய் பூமிதனில் இருக்க வேணும்
பருவமதில் சேறுபயிர் செய்ய வேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்தில் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்கள் அப்பனே அநேகம் கோடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே [3]
3
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்காய் வாய் ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமை அறியாச் சண்டாளர் முழு மாடப்பா
பாழாகப் பாவிகளின் சொல் கேளாதே
பதறாதே வயிற்றுக்காக மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே [4]