அகத்திணை வாயில்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தலைவன்-தலைவி மாட்டு நல்லுறவு அமையத் தூது செல்வோரை அகத்திணை வாயில்கள் என்பர்.

தலைவனும் தலைவியும் தம் உள்ளத்துள் உணர்ந்து அனுபவிக்கும் இன்பம் இத்தன்மையுடையது எனப் பிறர்க்கு விளக்க இயலாததாக இருப்பது. தம்முள்ளும் ஒருவர்க்கொருவர் விளக்க இயலாததாக இருப்பது. ஆகவே காதல் ஒழுக்கத்தை ‘அகம்’ என்றது மிகவும் பொருத்தமாகும். ‘அகம்’ என்பதை ‘ஆகுபெயர்’ என்றார் நச்சினார்க்கினியர். அகம் என்பது அகத்தே (உள்ளத்தே) நிகழும் இன்பத்திற்கு ஆகி வந்தது என்பது அவர் கருத்து.

இது தலைவன்-தலைவி உறவாக அமையின் போற்றப்படும், அதுவும் திருமணத்துக்கு முன் அமையும் களவு வாழ்க்கை சிலருக்கோ பலருக்கோ தெரியும்படியாக வெளிப்பட்டால் அச்செய்தி ஊரெங்கும் மெல்ல பரவுவதை அலர் என்பர். அது தலைமக்களின் களவு வாழ்க்கையை முடிபு பெறச் செய்து கற்பு வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டுவிடும் இருப்பினும் தலைவன்-பரத்தை உறவு பழிக்கப்படும். தலைவன் தலைவி இருவரின் ஒழுக்கத்தை கட்டமைக்கும் தன்மைக்கு உரியவர்கள் அகத்திணை வாயில்கள் எனப்படுவர்.

இந்த வாயில்கள் யார் யார் எனத் தொல்காப்பியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார். (கற்பியல் 52)

  1. தோழி,
  2. தாய்,
  3. பார்ப்பான்,
  4. பாங்கன்,
  5. பாணன்,
  6. பாடினி,
  7. இளையர்,
  8. விருந்தினர்,
  9. கூத்தர்,
  10. விறலியர்,
  11. அறிவர்,
  12. கண்டோர்

என்னும் 12 பேர் வாயில்கள். இவர்களை வீட்டுக்குள் நுழைய இடம் தரும் வாயிலோடு ஒப்பிடலாம்.

காண்க

"https://tamilar.wiki/index.php?title=அகத்திணை_வாயில்கள்&oldid=20362" இருந்து மீள்விக்கப்பட்டது