அகடம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அகடம்
இயக்கம்முகமது இசாக்
தயாரிப்புஎம்.ரசியாபி முகம்மது மற்றும் முகமது இஷாக்
இசைபாஸ்கர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அகடம் (Agadam) என்பது முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஒரே வீச்சில் தயாரிக்கப்பட்டது என்பதால், இது கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை புரிந்த படம் 'அகடம்'. லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்சன் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஒரே முறையில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 வினாடிகள் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செம்மையாக்கம் கூடச் செய்யப்படவில்லை.[1][2][3]

கதை சுருக்கம்

நண்பர்களான அசோக், சஞ்சய் ஆகிய இருவரும் பிணக்கிடங்கில் இருந்து ஒரு பெண் பிணத்தை தமிழ் என்றவரின் துணையோடு தூக்கி வந்து ஒரு வீட்டுக்குள் புதைக்கிறார்கள். அப்போது தனது முதலாளி அனுப்பிய ஆள் என்று ஜான் அங்கு வருகிறார். அவரிடம் நண்பர்கள் இருவரும் போலி மருந்து விற்பனைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் நண்பர்களிடம் ஜான் பார்ட்டி கேட்க, ஒரு பெண்ணை கூட்டி வருகிறேன் என்று சொல்லி சஞ்சய் வெளியே கிளம்புகிறார். இந்நிலையில், முதலாளியிடமிருந்து போன் ஒன்று வருகிறது. அப்போது அவர் பேசுகையில், மார்ச்சுவரியில் இருந்து பிணத்தை கொண்டுவர உதவி செய்த தமிழை தீர்த்துக்கட்டும்படி ஜானுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.

இதையடுத்து ஜானும், அசோக்கும் சேர்ந்து உதவி செய்த இளைஞரை பேய் போல் பயமுறுத்தி கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், இவர்களால் அந்த வீட்டுக்குள் புதைக்கப்பட்ட பெண்ணின் ஆவி இவர்களை பழிதீர்க்க பார்க்கிறது. இறுதியில், அந்த ஆவி இவர்களை பழிவாங்கியதா? அல்லது உதவி செய்த இளைஞரை அவர்கள் கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அகடம்_(திரைப்படம்)&oldid=29852" இருந்து மீள்விக்கப்பட்டது