ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி கோயம்புத்தூரிலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரிலும் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் ஆகும். இந்தியாவின் மிகப் பழமையான பள்ளிகளில் இவையும் அடங்கும்.
ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
1044, அவிநாசி சாலை, கோயம்புத்தூர்-641 018, தமிழ்நாடு மற்றும் குன்னூர் இந்தியா | |
தகவல் | |
குறிக்கோள் | 'Excelsa Sequar' |
தொடக்கம் | 1862 |
அதிபர் | எஸ். நடராஜன் (தற்காலிகப் பணி) |
பணிக்குழாம் | 136 |
மாணவர்கள் | 3000+ |
கீதம் | To God be the glory |
இணையம் | http://staneshighersecondaryschool.com/ |
கோவைப் பள்ளியை 1862இலும் குன்னூர் பள்ளியை 1858இலும் சர் இராபர்ட் ஸ்டேன்ஸ் நிறுவினார்.[1] நான்கு மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் துவங்கப்பட்ட கோயம்புத்தூர் பள்ளி இன்று 3000 மாணவர்களுடன் 136 கல்வியாளர்களுடன் இயங்குகிறது. துவக்கத்தில் ஐரோப்பிய மற்றும் ஐரோயாசிய பள்ளியாக இருப்பினும் இன்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு சிறுபான்மையர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ கண்ணன், அமுதா. "Founder of Stanes school honoured". த இந்து. http://www.hindu.com/2006/11/14/stories/2006111400970200.htm. பார்த்த நாள்: 2008-02-13.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளியிணைப்புகள்
ஸ்டேன்ஸ் பள்ளி, கோயம்புத்தூர் "http://staneshighersecondaryschool.com/ பரணிடப்பட்டது 2009-05-04 at the வந்தவழி இயந்திரம்"
ஸ்டேன்ஸ் பள்ளி, குன்னூர் "http://www.stanesschoolcoonoor.com/"