வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பதினெட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. மணப்பாறை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வையம்பட்டியில் இயங்குகிறது. இவ்வூர் சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூரின் பெயரை அக்காலத்தில் மக்கள் விலம்பட்டி என்று அழைத்து வந்தனர் பின்பு இது வில் அம்பு பட்டி என்ற பெயர் காலப்போக்கில் வையம்பட்டி என்று மாற்றமடைந்து விட்டது வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்னும் ஊரில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகக் கருதப்படுவது பொன்னியாறு அணைக்கட்டு ஊர் சென்னையில் இருந்து தேனி செல்லும் வழியில் இடையில் அமைந்துள்ளது வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு சந்தை வியாபாரம் நடக்கும் மேலும் வியாழக்கிழமை ஆடுகள் விற்பனை சந்தையும் ஞாயிற்றுக்கிழமை கோழி விற்கும் சந்தையும் நடைபெறும்.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,463 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 14,956 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 10 ஆக உள்ளது. [1]

ஊராட்சி மன்றங்கள்

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினெட்டு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்