வீராணப் புலவர்

வீராணப் புலவர் ‘அருணாசல கீர்த்தனை’ பாடியவர். காஞ்சிபுரத்தில், கி. பி. 1800ல் [1] வாழ்ந்தவர்.

இவரது கீர்த்தனையில் 208 சந்த விருத்தங்கள் உள்ளன. அருணாசல புராணம் நூலில் உள்ளபடியே இந்த நூலிலும் இவர் சருக்கங்களை அமைத்துள்ளார். கீர்த்தனை உருப்படிகள் மொத்தம் 190.

இவர் இதில் பாடியிருந்த வல்லாள மகாராசன் கதை இதிலிருந்து எடுக்கப்பட்டு அருணாசல புராணம் 1912-ம் ஆண்டுப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

இதனையும் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. சகம் 1722
  2. பி. வே. நமச்சிவாய முதலியார் பதிப்பு, ஐதிகப் படங்களுடன் கூடியது. நிரஞ்சன விலாச அச்சகம், 1912
"https://tamilar.wiki/index.php?title=வீராணப்_புலவர்&oldid=18213" இருந்து மீள்விக்கப்பட்டது