வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்
வீரவநல்லூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள தொன்மையான வைணவத் திருக்கோயில். காசிப முனிவர் தவமிருந்து பெருமாளைத் தரிசித்து தங்கச்செய்த திருத்தலம்.
வீரவநல்லூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | வீரவநல்லூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | வீரவநல்லூர் |
மாவட்டம்: | திருநெல்வேலி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரராஜ பெருமாள் |
தாயார்: | சுந்தரவல்லி |
வரலாறு | |
தொன்மை: | பழைமையானது |
கும்பாபிஷேகம்
இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள இத்திருக்கோயிலை அறநிலையத்துறை சீரமைக்காததால், பக்தர்களாலும் அர்ச்சகர்களாலும் என்.வெங்கடாச்சாரி எனும் பக்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பக்தர்கள் மூலம் சுமார் 49 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் செய்யப்பட்டு 15.03.2013 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. [1]
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவில் சேரன்மாதேவிக்கும் அம்பாசமுத்திரத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது வீரவநல்லூர்.[2]
மேற்கோள்கள்
- ↑ குமுதம் ஜோதிடம்;8.03.2013; பக்கம் 2-6;
- ↑ http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=30295