வீரப்ப மொய்லி

மூடுபித்ரி வீரப்ப மொய்லி (Moodbidri Veerappa Moily, கன்னடம்: ಮೂಡಬಿದ್ರಿ ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ) (பிறப்பு: சனவரி 12, 1940) கருநாடக மாநில அரசியல்வாதியும் நடுவண் அரசின் முன்னாள் வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார்.[1] 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றார்.[2]

வீரப்ப மொய்லி
ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ
Veerappa Moily BNC.jpg
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு & உருக்குத் துறை அமைச்சர்
பதவியில்
28 அக்டோபர் 2012 – 26 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்முரளி தியோரா
பின்னவர்தர்மேந்திர பிரதான்
வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர்
பதவியில்
சூலை 13, 2011 – அக்டோபர் 28, 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்அன்சுராசு பரத்வாச்
பின்னவர்சச்சின் பைலட்
மின்சாரத்துறை அமைச்சர்
பதவியில்
சூலை 31, 2012 – அக்டோபர் 28, 2012
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்சுசீல்குமார் சிண்டே
பின்னவர்ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
28 மே 2009 – சூலை 12, 2011
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்அன்சுராசு பரத்வாச்
பின்னவர்சல்மான் குர்சித்
கருநாடக முதலமைச்சர்
பதவியில்
19 நவம்பர் 1992 – 11 திசம்பர் 1994
ஆளுநர்குர்செத் ஆலம் கான்
முன்னையவர்எஸ். பங்காரப்பா
பின்னவர்எச். டி. தேவ கௌடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சனவரி 1940 (1940-01-12) (அகவை 84)
மூடுபித்ரி, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மாலதி மொய்லி
பிள்ளைகள்3 மகள்கள்
1 மகன்
முன்னாள் கல்லூரிபல்கலைக்கழகக் கல்லூரி, மங்களூரு
பெங்களூரு பல்கலைக்கழகம்
இணையத்தளம்அலுவலக வலைத்தளம்

மொய்லி துளு இனத்தைச் சேர்ந்த முதல் கருநாடக முதலமைச்சராக நவம்பர் 19, 1992 முதல் திசம்பர் 11, 1994 வரை பணியாற்றி உள்ளார். உடுப்பி மாவட்டத்தின் கர்கலா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆந்திர அரசியலை கண்காணித்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார்.

மேற்கோள்களும் குறிப்புக்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வீரப்ப_மொய்லி&oldid=18996" இருந்து மீள்விக்கப்பட்டது