வி. பி. இராமன்
வெங்கட்ட பட்டாபிராமன் (Venkata Pattabhi Raman) (3 அக்டோபர் 1932 - 2 திசம்பர் 1991) என்பவர் ஒரு இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார், இவர் 1977 முதல் 1979 வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவரது மகன் மோகன் ராமன் ஒரு புகழ்பெற்ற நடிகர்.
வெங்கட்ட பட்டாபிராமன் | |
---|---|
தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் | |
பதவியில் 1977–1979 | |
முன்னையவர் | கே. பராசரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இந்தியா, தமிழ்நாடு, சென்னை | 3 அக்டோபர் 1932
இறப்பு | 2 திசம்பர் 1991 தமிழ்நாடு, சென்னை | (அகவை 59)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | மோகன் ராமன், பி. எஸ். இராமன், பி. ஆர். இராமன் |
முன்னாள் கல்லூரி | இலயோலாக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி |
வேலை | வழக்கறிஞர் |
தொழில் | மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் |
ஆரம்பகால வாழ்க்கை
இராமன் 1932 அக்டோபர் 3 அன்று சென்னையில் பிறந்தார், சர்ச் பார்க் பள்ளியியல் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும், இராமன் லயோலா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மேலும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார், தங்கப் பதக்கத்துடன் தனது படிப்பை முடித்தார்.
அரசியல்
துவக்கத்தில், இராமன் பொதுவுடமை இயக்கத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார். எனினும், இவர் 1955இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். மேலும் கட்சியின் சட்டதிட்டங்களை ஈ. வெ. கி. சம்பத் மற்றும் இரா. செழியன் ஆகியோரிடன் இணைந்து உருவாக்கினார்.
குறிப்புகள்
- [1]
- [2][தொடர்பிழந்த இணைப்பு]
- [3] பரணிடப்பட்டது 2009-08-04 at the வந்தவழி இயந்திரம்