வி. சூ. நைப்பால்

சர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால் (V. S. Naipaul; 17 ஆகத்து 1932 – 11 ஆகத்து 2018), அல்லது வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால், டிரினிடாடில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஆவர். 2001 ஆம் ஆண்டில் இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1][2]

வி. சூ. நைப்பால்
VS Naipaul 2016 Dhaka (cropped).jpg
இயற்பெயர் வி. எஸ். நைப்பால்
V. S. Naipaul
பணி புதின, பயண, கட்டுரை எழுத்தாளர்
தேசியம் டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரித்தானியா
வகை புதினம், கட்டுரைகள்
குறிப்பிடத்தக்க விருதுகள் மான் புக்கர் பரிசு
1971
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2001
துணைவர் பாட்ரீசியா ஆன் ஹேல் நைப்பால் (1955 - 1996)
நதிரா நைப்பால் (1996 - இன்று)

பிறப்பும், கல்வியும்

இவர் கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்பெயின் போர்ட்டில் அரசி ராயல் கல்லூரியில் பயின்றார் வெளிநாட்டில் சென்று படிக்க டிரினிட்டாட் அரசு கல்வி உதவித் தொகை இவருக்கு வழங்கியது.அந்த உதவித் தொகையைக் கொண்டு ஆங்கில இலக்கியம் படிக்க ஆக்சுபோர்டுக்குச் சென்று கல்வி பயின்றார்.

படைப்புகள்

மனத்தில் உறுதியும் தெளிவும் கொண்ட நைப்பால் நூல்கள் பல எழுதினார். புதினங்களும் பயணநூல்களும் எழுதி உள்ளார். இசுலாமிய நாடுகளான ஈரான் இந்தோனேசியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தம் அனுபவங்களையும் கருத்துகளையும் ஒரு நூலில் எழுதினார். பல்வேறு நாடுகளின் அடிமைகள் பற்றியும் கொரில்லாப் போராட்டம் பற்றியும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் ஏழைகளின் ஒடுக்கப்பட்டோரின் நிலைகள் பற்றியும் தம் நூல்களில் எழுதியுள்ளார். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சிக்கல்கள் பற்றியும் எழுதினார். இந்தியாவிலும் பயணம் செய்து மூன்று நூல்கள் எழுதினார்.

திருமணம்

ஆக்சுபோர்டில் பாட்ரிசியா ஆன் ஹேல் என்னும் பெண்ணைச் சந்தித்தார். 1955இல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவி 1996 இல் இறந்தார். பின்னர் நதிரா என்னும் பெண்ணை மணந்துகொண்டார்.

பட்டங்களும் பரிசுகளும்

  • புக்கர் பரிசு (1971)
  • நைட் பட்டம் (1981)
  • டேவிட் கோகன் பிரிட்டிசு இலக்கியப் பரிசு (1993)
  • நோபல் பரிசு (2001)
  • கேம்பிரிட்ஜ் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழக சிறப்பு முனைவர் பட்டங்கள்.

குறிப்பிடத்தக்க நூல்கள்

  • Miguel Street (1959)
  • A House for Mr Biswas (1961)
  • A Bend in the River (1979)
  • A Way in the World (1994)
  • An Area of Darkness (1963)
  • In a Free State (1971)
  • India: An wounded civilization (1977)
  • Among the Believers:An Islamic Journey (1981)
  • The Enigma of Arrival (1987)
  • India:A Million Mutinies Now (1990)
  • Reading and Writing:A Personal Account (200)
  • Literary Occasions (2004)
  • Guerrillas (2012)

வரலாறு

பாட்ரிக் பிரஞ்ச் என்பவர் நைப்பாலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். 500 செல்வாக்குப் படைத்தோர் பட்டியலில் வீ எஸ் நைப்பாலும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். டெப்ரடும் சண்டே டைம்சும் (இங்கிலாந்து) இணைந்து தெரிவு செய்துள்ளனர். (2014) இங்கிலாந்தில் வில்சயரில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.

மறைவு

நைப்பால் 2018 ஆகத்து 11 அன்று தனது 85-வது அகவையில் இலண்டனில் காலமானார்.[3][4][5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வி._சூ._நைப்பால்&oldid=19641" இருந்து மீள்விக்கப்பட்டது