வி. எஸ். நரசிம்மன் (இசையமைப்பாளர்)
வி. எஸ். நரசிம்மன் (V. S. Narasimman) என்பவர் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளராவார். இவர் 1984 இல் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் அறிமுகமானார்.[1][2]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வி. எஸ். நரசிம்மன் |
---|---|
பிறந்தஇடம் | மைசூர், கர்நாடகா, இந்தியா |
பணி | திரைப்பட இசையமைப்பாளர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | வயலின் கலைஞர், இசையமைப்பாளர் |
பெற்றோர் | கோட்டுவாத்தியம் சீனவாச ஐயங்கார் |
இசைப்பயணம்
நரசிம்மனின் தந்தை கோட்டுவாத்தியம் சீனிவாச ஐயங்கார் ஆவார். இவரின் நான்கு வயதிலிருந்து தன் தந்தையின் கச்சேரிகளில் பங்கெடுத்து இசை பயின்றார். 1958 ஆம் ஆண்டிலிருந்து திரையிசையில் பிரபலமாக இருந்த இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்தார். இதில் ஜி. ராமநாதன் இசையமைப்பில் மட்டும் பங்கெடுக்கவில்லை. ஜி. கே. வெங்கடேசின் இசைக்குழுவில் இளையராஜா உதவியாளராக பங்காற்றிய போதிருந்து இவருக்கு இளையராஜாவின் அறிமுகம் கிடைத்தது. அன்னக்கிளி திரைப்படத்திலிருந்து இளையராஜாவின் இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் கலைஞராக பணியாற்றினார். சிம்பொனி உட்பட பல்வேறு இசைத்தொகுப்பில் இளையராஜாவிற்கு வயலின் வாசித்தார். 1984-இல் கே. பாலசந்தர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3][4]
திரைப்படப் பட்டியல்
- 1984- அச்சமில்லை அச்சமில்லை- (அறிமுகம்)
- 1984- புதியவன்
- 1985- ஈரன் சந்தியா
- 1985- யார்
- 1985- கல்யாண அகதிகள்
- 1986- கடைக்கண் பார்வை
- 1986- ஆயிரம் பூக்கள் மலரட்டும்
- 1987- வண்ணக் கனவுகள்
- 1987- சின்னமணிக் குயிலே
- 1988- கண் சிமிட்டும் நேரம்
- 1990- ஒரு வீடு இரு வாசல்
- 1994- பாச மலர்கள்
மேற்கோள்கள்
- ↑ NARASIMHAN FILMOGRAPHY. cinestaan.com. https://www.cinestaan.com/people/vs-narasimhan-96649/filmography.
- ↑ tamil/musicdirector/v-s-narasimhan-movies-list. spicyonion.com. https://spicyonion.com/tamil/musicdirector/v-s-narasimhan-movies-list/.
- ↑ பிரபா, கானா. "இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் பாடல்களோடு பேசுகிறார்" (in en). http://www.radiospathy.com/2012/02/blog-post_16.html.
- ↑ பிளாப்பி, பிம்பிடிக்கி (2015-07-22). "V.S.Narasimhan [Music Director"] (in en). https://antrukandamugam.wordpress.com/2015/07/22/v-s-narasimhan-music-director/.