விழா (Vizha) 2013ஆம் ஆண்டு பாரதி பாலகுமாரன் இயக்கிய தமிழ் திரைப்படமாகும்.[1] இதில் மகேந்திரன் , மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.[2] விருது பெற்ற குறும்படமான உதிரியை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம், இறப்பு நிகழ்வுகளில் பறை வாத்தியத்தை இசைக்கும் சுந்தரம் (மகேந்திரன்) ஒப்பாரிப் பாடகி ராக்கம்மா (மாளவிகா) ஆகியோரின் காதல் கதையை சித்தரிக்கிறது.[3] படம் மதுரை,திருச்சி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பிரவீன் கே. எல் - என். பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பினை செய்தனர்.[4] ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அழூர் என்டர்டெயின்மென்ட் , ஜேவி மீடியா ட்ரீம்ஸ் ஆகியவற்றிற்காக ராம நாராயணன், சுனிர் கேதர்பால் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.[5] இது 27 திசம்பர் 2013 அன்று வெளியிடப்பட்டது.[3]

விழா
Theatrical release poster
இயக்கம்பாரதி பாலகுமாரன்
தயாரிப்புராம நாராயணன்
சுனிர் தேதார்பால்
கே. ஜி. ஜெயவேல்
பாலமுருகன்
கதைபாரதி பாலகுமாரன்
இசைஜேம்ஸ் வசந்தன்
நடிப்புமகேந்திரன்
மாளவிகா மேனன்
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
என். பி ஸ்ரீகாந்த்
கலையகம்தேனாண்டாள் படங்கள்
அழூர் என்டர்டெயின்மென்ட்
ஜேவி மீடியா ட்ரீம்ஸ்
வெளியீடு27 திசம்பர் 2013 (2013-12-27)
ஓட்டம்இந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விழா&oldid=37665" இருந்து மீள்விக்கப்பட்டது