விருத்தி உரை

விருத்தி உரை என்பது சூத்திரம் எனப்படும் நூற்பாவிற்கு எழுதப்பட்ட காண்டிகை உரையின் தொடர்ச்சியாக அமையும் கூடுதல் இலக்கணமாகும்.

காண்டிகை உரையில் கூறிய நூற்பாவின் உட்பொருள் விளக்கத்தோடு மட்டும் அல்லாமல் அவ்விடத்திற்கு இன்றியமையாதனவாகக் கருதப்படும் அனைத்துக் கருத்துகளையும் விளக்குதல் வேண்டும். இவ்விளக்கம் ஆசிரியனுடைய உரையாகவும் பிற நூலாசிரியர்களின் கருத்துகளை எடுத்துக் காட்டும் மேற்கோள்களாலும் ஐயம் அகற்றும் வகையில் இலக்கண உண்மையை சிறிதும் குறைவின்றி விளக்கிச் சொல்வதாக அமையுமென விருத்தி உரைக்கு விளக்கமளிக்கிறது நன்னூல்.[1]

அடிக்குறிப்புகள்

  1. சூத்திரத் துட்பொருள் அன்றியும் ஆண்டைக்கு
    இன்றி யமையா யாவையும் விளங்கத்
    தன்னுரை யானும் பிறநூ லானும்
    ஐயம் அகலஐங் காண்டிகை யுறுப்பொடு
    மெய்யினை எஞ்சா திசைப்பது விருத்தி. - நன்னூல் (23)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விருத்தி_உரை&oldid=20276" இருந்து மீள்விக்கப்பட்டது