வியட்நாம் வீடு சுந்தரம்

வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்படும் கே. சுந்தரம் (1941 - ஆகத்து 6, 2016) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ள இவர் சிறப்பான குடும்பக் கதைகளுக்காக அறியப்படுகிறார். இவரது கதைகள் தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளிலும் படமாக்கப்பட்டுள்ளன.[1] தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார்.

வியட்நாம் வீடு சுந்தரம்
பிறப்புகே. சுந்தரம்
1941
சென்னை
இறப்புஆகத்து 6, 2016 (அகவை 76)
பணிதிரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1970கள்-2000கள்

வாழ்க்கைக் குறிப்பு

திரைப்பட விபரம்

இயக்கிய திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்புகள்
1973 கௌரவம் சிவாஜி கணேசன், உஷாநந்தினி
விஜயா திரைக்கதை ஆசிரியராகவும்
1974 தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திரைக்கதை ஆசிரியராகவும்
1991 ஞான பறவை சிவாஜி கணேசன், மனோரமா திரைக்கதை ஆசிரியராகவும்

மறைவு

வியட்நாம்வீடு சுந்தரம் 2016 ஆகத்து 6 அதிகாலை தனது 76வது அகவையில் சென்னை, தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வியட்நாம்_வீடு_சுந்தரம்&oldid=21264" இருந்து மீள்விக்கப்பட்டது