வினைத்தொகை

தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்பது மூன்று கால வினைகளையும் ,தெரிநிலை பெயரெச்ச விகுதிகளையும்மறைத்து ஒருசேரக் குறிக்குமாறு வரும் ஒரு பெயர்ச்சொல். பரவலாக எடுத்துக்காட்டப்படும் சொல் ஊறுகாய் என்பது. இச்சொல் ஊறுகின்ற காய், ஊறின காய், ஊறும் காய் என முக்கால வினைகளையும் குறிக்கும். இதே போல வீசுதென்றல் என்னும் பொழுது வீசுகின்ற தென்றல் (தெற்கு நோக்கி மென்மையாக வீசும் காற்று), வீசிய தென்றல் , வீசும் தென்றல் என்று முக்கால வினையையும் குறிக்கும்.

வினைத்தொகை ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் இணைந்த கூட்டுச் சொல் ஆகும். முதல் சொல் வினைச்சொல்லாக இருக்கும், பின்வரும் சொல் பெயர்ச்சொல்லாக இருக்கும். முன்வரும் வினைச்சொல், மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் சொல்லாக அமையும்.

எடுத்துக்காட்டுகள்

  • ஊறுகாய்
  • நிகழ்த்துகலை
  • வீசுதென்றல்
  • கடிநாய்
  • படர்கொடி
  • சுடுசோறு
  • குடிநீர்
  • ஏவுகணை
  • அலைபேசி
  • நகருயிர்
  • ஓடுதளம்
  • ஆடுகளம்
  • தாழ்பூந்துறை
  • உய்முறை
  • செய்முறை
  • சுடுகாடு
"https://tamilar.wiki/index.php?title=வினைத்தொகை&oldid=20319" இருந்து மீள்விக்கப்பட்டது