விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் நோக்கி எழுப்பப்பட்ட விமர்சனங்களே விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் ஆகும். இந்த விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளையும் கொண்டிருந்தன. யாரால், எந்தத் தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பவற்றைக் கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் முக்கியம்.

விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இன்மை

புலிகள் நோக்கிய ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கத்தக்க கட்டமைப்பு அல்லது ஒழுங்கமைப்பு புலிகளின் இயக்க அமைப்பில் இல்லை; அப்படி இருந்தாலும் அதைப் பற்றி மக்களோ அல்லது விமர்சகர்களோ அறியவில்லை; அல்லது அப்படியான ஒரு தோற்றப்பாடு இருக்கின்றது. பல தரப்பட்ட பிரிவுகளையும் பலக்கிய (complex) கட்டமைப்பையும் புலிகளின் இயக்கம் கொண்டிருக்கின்றது. அப்படியிருந்தும் விமர்சனங்களை, மக்களின் கருத்துக்களை, மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கி, அவற்றுக்கு ஏற்ற மறுமொழியையோ, மாற்றங்களையோ தாம் ஏற்படுத்தி, அவற்றைப் பற்றிய கருத்து தொடர்பாடலை விடுதலைப் புலிகள் சரிவர செய்யவில்லை. எனவே இது மேலோட்டமான குறையன்று, இது அடிப்படையான (fundamental) குறைபாடு. விமர்சனத்திற்குத் தேவையான தனிப்பட்ட மனித உரிமைகளை பேணுவதற்கான சூழலுக்கும், மாற்று அமைப்புக்களுக்கான சூழலுக்கும் விடுதலைப் புலிகள் இடம்தரவில்லை. தமது போராட்ட சூழ்நிலை, வழிமுறை அல்லது தன்மை இவற்றுக்கு இடம் தரவில்லை என்றே இந்த முக்கிய குறையை புலிகள் நியாப்படுத்தி வருகிறார்கள்.

புலிகள் தமது உள் இயக்க விமர்சனங்களையே வன்முறை அல்லது பிளவு மூலமே பல கால கட்டங்களில் கையாண்டிருக்கின்றார்கள். உமாமகேஸ்வரன் விலகல், மாத்தையாவின் மரண தண்டனை, கருணாவின் பிளவு ஆகியவை இவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

அடிப்படைத் தனிமனித உரிமைகளைப் பேணுவதான உறுதி தராமை

புலிகள் ஒரு தனிமனிதருக்கான உரிமைகள் இவை, இவை என்றும் பேணப்படும் என்று எந்தவித உறுதியையும் இதுவரை உத்யோகபூர்வமாக வெளியிடவில்லை. கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் [1] போன்றோ அல்லது அமெரிக்காவின் Bill of Rights போன்றோ தனிமனித உரிமைகளைப் பேணுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் புலிகள் இதுவரை வெளியிடவில்லை. ஓர் அரசுக்குத் தேவையான அடிப்படையான அம்சங்களில் இதுவும் ஒன்று. பல தரப்பட்ட சட்டங்களை இயற்றி மக்களின் பலதரப்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த முனையும் புலிகள் அமைப்பு, இத்தகைய முக்கியமான ஒரு அடிப்படை அம்சத்தை இன்னும் பிற்போட்டிருப்பது ஒரு முக்கிய குறைபாடே.

பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு உறுதி தராமை

புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அல்லது அதிகார வீச்சுக்குள் இருக்கும் நிலப்பரப்புகளில் புலிகளை விமர்சிக்கும் பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தினமுரசு பத்திரிகை மீதான தடை இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. துக்ளக் சஞ்சிகையை தீயிட்டமை இதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.[2] பரணிடப்பட்டது 2007-12-18 at the வந்தவழி இயந்திரம் பல தென் இந்திய தமிழ்த் திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தம்மக்கள் மீதே உளவழிப் போர் உத்திகளை பயன்படுத்தல்

தம்மக்கள் மீதே உளவழிப்போர் உத்திகளையும், பரப்புரையையும் புலிகள் பரவலாக பயன்படுத்துகின்றார்கள். தமிழீழ மக்களின் கணிசமானவர்களை "துரோகிகள்" என்று முத்திரை பதித்து மிரட்டி ஒதுக்குவது இதற்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.

வன்முறையாக சட்டத்தை மீறுதல்

பல எதிர்ப்புப் போராட்ட முறைகளை தகுந்த கருத்தில் கொள்ளாமல் வன்முறையாக சட்டத்தை புலிகள் மீறினார்கள். புலிகள் தொடக்க காலத்தில் செய்ததாக குற்றம் சாட்டப்படும் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவின் கொலை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. தற்காலத்தில் சட்டத்தை பேணும் ஓர் அதிகார அரசாக புலிகள் தம்மை முன்னிறுத்த முனைவதில் இருக்கும் ஒரு முக்கிய முரண் இதுவாகும்.

ஏக பிரதிநிதித்துவம் நிலைப்பாடு

ஜனநாயக விழுமியங்களைப் பேணாமை

இறுக்கமான மூடிய கட்டமைப்பு

புலிகளின் ஓர் இறுக்கமான மூடிய கட்டமைப்பை பேணி வருகின்றார்கள். மூடிய சமுதாயங்கள் வன்முறையற்ற தலைமை அல்லது அரசியல் மாற்றத்தை செய்யமுடியாதவையாகும். தொலைநோக்கில் விரும்பத்தக்க திறந்த சமுதாயத்தை எப்படி இறுக்கமான மூடிய கட்டமைப்பை கொண்ட புலிகளால் நடைமுறைப்படுத்த முடியும் என்பது கேள்விக்குரியதே.

பயங்கரவாத செயற்பாடுகள்

சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தல்

சிறுவர்களை புலிகள் போரில் ஈடுபடுத்துவதாக புலிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் பிறப்பு இறப்பு தரவுகளே இதற்கு தகுந்த சான்றாக அமைந்தன. எனினும் ஜனவரி 01, 2008 முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் [1] 18 வயதுக்கு கீழான எந்தவொரு உறுப்பினரும் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என UNICEF அமைப்புக்கு புலிகளின் அரசியல் தலைவர் நடேசன் உறுதியளித்தார்.

கட்டாய ஆள் சேர்ப்பு

தமிழ் இனவாதத்தை ஊக்குவித்தல், செயற்படுத்தல்

முஸ்லீம்களின், சிங்களவர்களின் கட்டாய வெளியேற்றம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்