விஜி (நடிகை)
விஜி (Viji) தமிழ் படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தனது முதல் படத்தில் அறிமுகமாகி 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[3]
விஜி | |
---|---|
பிறப்பு | விஜி அஸ்வத்[1] 1966 இந்தியா |
இறப்பு | 2000 நவம்பர் 27[2] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1982 முதல் 2000 வரை |
சுயசரிதை
கங்கை அமரனின் கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் "கோழி கூவுது" விஜி என அழைக்கப்பட்டார்.[4][5][6]
பூவே உனக்காக படப்பிடிப்பின் போது இவருக்கு இடுப்பு மற்றும் முதுகு வலி ஏற்பட்டது[7] 1996இல் இவருக்கு முள்ளந்தண்டு வட அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனையில் நடந்தது. அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது மற்றும் அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட காயத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.[8] மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு,[7] விஜி தற்காலிக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.[6][9] அப்போலோ மருத்துவமனைகளுக்கு எதிராக ஒரு வழக்கை அவர் தாக்கல் செய்தார் , மருத்துவமனை நிர்வாகம் இவருக்கு ரூ .30,000த்தை திரும்ப வழங்கியது.[8] விஜி ஒரு சரியான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பினார்[10] 2000 இல் மீண்டும் சிம்மாசனம் என்றத் திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.[11] விஜியை பல படங்களில் நடிக்க வைத்த நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த்தார், மேலும் தனது அடுத்த படமான வாஞ்சிநாதன் படத்தில் அவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்,[12] ஆனால் "சிம்மாசனம்" இறுதியில் அவரது கடைசி படமானது.
2000 நவம்பர் 27 அன்று சென்னையில் தனது வீட்டிலேயே விஜி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமென ஏற்கனவே திருமணம் செய்து கொண்டஇயக்குநர் ஏ.ஆர். ரமேஷ் என்பவரை குற்றம் சாட்டினர்.[3][13] ரமேஷ் அவரைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார், ஆனால் பின்னர் மறுத்துவிட்டார் மற்றும் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ரமேஷ் விஜியை ஒரு விழாவில் சந்தித்தார் என தி இந்து நாளிதழ் எழுதியது.[2] ரமேஷ், அவரது மனைவி ஏ. ஆர். சுமதி மற்றும் அவரது நண்பர் சின்னசாமி ஆகியோர் விஜியின் தற்கொலையை தூண்டியதாக காரணம் காட்டி மகிலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[2]
குறிப்புகள்
- ↑ "Newspaper Article – Why do Tamil actresses keep committing suicide?". Newspapers.nl.sg. http://newspapers.nl.sg/Digitised/Article/today20001214-1.2.23.9.aspx. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ 2.0 2.1 2.2 "Tamil Nadu / Chennai News : Three absolved in actress' suicide case". The Hindu இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050714005551/http://www.hindu.com/2005/07/12/stories/2005071207190500.htm. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ 3.0 3.1 "Telugu cinema – Story of Viji". Idlebrain.com. http://www.idlebrain.com/research/untold/untold_viji.html. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ http://www.mid-day.com/entertainment/2002/apr/23474.htm
- ↑ "rediff.com, Movies: For whom death tolls". Rediff.com. 16 April 2002. http://www.rediff.com/movies/2002/apr/16monal.htm. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ 6.0 6.1 Lata Srinivasan, TNN 23 June 2012, 12.00 AM IST (23 June 2012). "Kollywood turns to suicide – Times of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 25 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130925131851/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-23/news-interviews/32370015_1_kollywood-love-failure-film-industry. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ 7.0 7.1 "Tamil Movie News – Gentleman-in pala kashtangal" இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924034544/http://www.indolink.com/tamil/cinema/News/97/Oct/ktk.htm.
- ↑ 8.0 8.1 "Messiahs Turn Mercenaries". Thesundayindian.com. 29 April 2007 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304122854/http://www.thesundayindian.com/article_print.php?article_id=1224. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ "Rediff on the Net Business Interview: Apollo Hospitals chief says India can earn $30 bn in health care". Rediff.com. http://www.rediff.com/money/1998/jan/02apoll2.htm. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ "It's a heavy price to pay". The Hindu. 3 May 2002 இம் மூலத்தில் இருந்து 14 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120114170027/http://hindu.com/fr/2002/05/03/stories/2002050300330300.htm. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ "rediff.com, Movies: Gossip from the southern film industry". Rediff.com. 21 June 2000. http://www.rediff.com/entertai/2000/jun/21spice.htm. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ "Actresses may come and actresses may go but Devayani goes on forever". Cinematoday2.itgo.com. http://cinematoday2.itgo.com/3Hot%20News%20Just%20%20U.htm. பார்த்த நாள்: 8 April 2013.
- ↑ http://archives.digitaltoday.in/indiatoday/20021223/living.html
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் விஜி
- Viji[தொடர்பிழந்த இணைப்பு] at Cinesouth