விஜய் பாபு
விஜய் பாபு என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரிகிறார். ஆந்திரப் பிரதேசம், காளத்தியில் பிறந்த இவர் 80 களின் முற்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக திரைப்படங்களில் இயங்கிவந்தார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.[1] இவரது மகன் ரமணாவும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு நடிகர் ஆவார்.[2]
இவர் நடித்த பிரபலமான படங்களில் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, படிக்காதவன் ஆகியவை அடங்கும்.[3] 1991 ஆம் ஆண்டில், ஸ்ரீசக்தி பிலிம்ஸ் காம்பைன்ஸ் என்ற பதாகையில் ஈஸ்வரி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். அதில் ஆனந்த் பாபு, கௌதமி ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர்.
திரைப்படவியல்
- இது முழுமையற்ற பட்டியலாகும், நீங்கள் இந்த பட்டியலை விரிவாக்கலாம்
தமிழ்
- ஒரு வீடு ஒரு உலகம் - 1978 (அறிமுகம்)
- ஒரு விடுகதை ஒரு தொடர்கதை - 1979
- ஒரு கோயில் இரு தீபங்கள் - 1979
- ஸ்ரீ தேவி - 1980
- குமரி பெண்ணின் உள்ளத்திலே - 1980
- மாதவி வந்தாள் - 1980
- பருவத்தின் வாசலிலே - 1980
- மீனாட்சி - 1980
- முயலுக்கு மூணு கால் - 1980
- ருசி கண்ட பூனை - 1980
- பௌர்ணமி நிலவில் - 1980
- எங்கள் வாத்தியார் - 1980 ரகுநாத்
- வேலி தாண்டிய வெள்ளாடு - 1980
- கடவுளின் தீர்ப்பு - 1981
- மீண்டும் சந்திப்போம் - 1981
- எங்கம்மா மகாராணி - 1981
- தரையில் வாழும் மீன்கள் - 1981
- காலம் ஒரு நாள் மாறும் - 1981
- துணைவி - 1982
- கசப்பும் இனிப்பும் - 1983
- படிக்காதவன் - 1985
- அக்னி தீர்த்தம் - 1990
- ஆரத்தி எடுங்கடி - 1990
- திருத்தம் - 2007
- உத்தமபுத்திரன் - 2010
- சக்ரா - 2021
மலையாளம்
- அனுபல்லவி - 1979
தொலைக்காட்சி
- 2002-2003 வரம் ( சன் தொலைக்காட்சி )
- 2005-2006 ஆனந்தம் ( சன் தொலைக்காட்சி )
- 2012-2013 ஆஹா ( விஜய் தொலைக்காட்சி )
குறிப்புகள்