விக்கிரம சிங்கையாரியன்

விக்கிரம சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் நான்காவது அரசனான இவன் கி.பி 1292 ஆம் ஆண்டிலிருந்து 1302 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான்.

விக்கிரம சிங்கையாரியன்
Vickrama Cinkaiariyan
யாழ்ப்பாண அரசன்
ஆட்சி1292-1302
முன்னிருந்தவர்குலோத்துங்க சிங்கையாரியன்
பின்வந்தவர்வரோதய சிங்கையாரியன்
முழுப்பெயர்
விக்கிரம சிங்கையாரியன்
தமிழ்விக்கிரம சிங்கையாரியன்
மரபுஆரியச் சக்கரவர்த்திகள்
தந்தைகுலோத்துங்க சிங்கையாரியன்

இவன் காலம் உள்நாட்டுக் குழப்பங்கள் மிகுந்த காலமாக இருந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புத்த சமயத்தவரான சிங்களவருக்கும், இந்துத் தமிழருக்கும் கலகம் மூண்டது. இரண்டு தமிழர் சிங்களவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிங்களவர் தலைவனுக்கும் வேறு 17 பேருக்கும் விக்கிரம சிங்கையாரியன் மரண தண்டனை விதித்ததாகவும் மேலும் பலரைச் சிறையில் அடைத்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை மூலம் அறியக் கிடைக்கின்றது. இதனால் பெருமளவு சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கினர். எனினும் விக்கிரம சிங்கையாரியன் இறக்கும் வரை அவனுக்குச் சிங்களவர்களால் தொல்லைகள் இருந்தே வந்தன.

விக்கிரம சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகன், வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண அரசனாக முடி சூட்டிக் கொண்டான்.

வெளியிணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=விக்கிரம_சிங்கையாரியன்&oldid=129996" இருந்து மீள்விக்கப்பட்டது