வால்பாறை வட்டம்

வால்பாறை வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த வால்பாறை வட்டத்தின் தலைமையகமாக வால்பாறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் ஆனைமலைக்குன்றுகள் கிராமம் ஒன்று மட்டும் வருவாய் கிராமமாக உள்ளது. [2]

மக்கள்தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வால்பாறை வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 70,859 ஆகும். அதில் ஆண்கள் 35,204, பெண்கள் 35,655 ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5,007 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 84.4% ஆகவுள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்து சமயத்தினர் 58,703 (82.84%), கிறித்தவர்கள் 9,570 (13.51%), இசுலாமியர் 2,458 (3.47%), மற்றவர்கள் 128 (0.18%) ஆகவும் உள்ளனர்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "கோயம்புத்தூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்". Archived from the original on 2021-10-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-27.
  2. வால்பாறை வட்டத்தின் 1 வருவாய் கிராமம்
  3. Valparai Taluka Population, Religion Data 2011
"https://tamilar.wiki/index.php?title=வால்பாறை_வட்டம்&oldid=127088" இருந்து மீள்விக்கப்பட்டது