வானகம் (பண்ணை)

வானகம் என்பது தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தின் கடவூர் வட்டத்தில் சுருமான்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை ஆகும். இது இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வாரின் வழிகாட்டலில் செயற்படுத்தப்படுகிறது. வறண்ட பாறை நிலப்பரப்பை மூன்று ஆண்டுகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்தி பல்லுயிர் வாழும் கானகமாக மாற்றியுள்ளனர்.[1]

வானகத்தின் நோக்கம்

  • உயிர்ச்சூழலுக்கு இசைவான, நிலைத்து நீடிக்கவல்ல வேளாண் முறைகளை வளர்த்தெடுப்பது.
  • உயிர்ச்சூழலுக்கு இசைவான, நிலைத்து நீடிக்கவல்ல பண்ணை உற்பத்தி முறைகள் குறித்து நாடெங்கும் உள்ள உழவர்களுக்குப் பயிற்சியளிப்பது.
  • நிலைத்து நீடிக்கவல்ல பண்ணை உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது.
  • வேளாண் விளைபொருட்களின் தர மேம்பாட்டிற்காக கலந்துரையாடல், விழிப்புணர்வு அளித்து உதவி புரிவது.
  • நாட்டில் உள்ள சராசரி மனிதர்க்கும் தரமான வேளாண் விளைபொருள் சென்றடைய பாடுபடுவது.
  • பட்டணத்தில் வாழ்பவர்களுக்கும் ஊர்ப்புறத்து உழவுக் கலாச்சாரத்திற்கும் உறவை ஏற்படுத்த வழிமுறைகளைக் கண்டறிவது.
  • நலமான வாழ்வியல் முறை, உணவு முறைகளைப் பரப்புவதன் மூலம் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவது.
  • பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த கருத்துக்களைப் பரப்புவதும் நடைமுறைப்படுத்துவதும்.
  • பாரம்பரிய சிகிச்சை முறைகளை அடிப்படையாகக் கொண்ட இயற்கை மருத்துவ நடுவத்தை நிறுவுவது.
  • வேலை வாய்ப்பை உருவாக்கவல்ல பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்வதும் நிதியுதவி செய்வதும்.

பயிற்சி

வானகம் தன்னார்வளர்களுக்கு தங்க இடமும், உணவும் தந்து இயற்கை வேளாண்மையை கற்றுக் கொடுக்கின்றது. உடன் இருநாள் பயிற்சி, நான்கு நாள் பயிற்சி, மூன்று மாத பயிற்சி ஆகியவற்றை நன்கொடைப் பெற்றுக் கொண்டும் நடத்தி வருகிறது.


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வானகம்_(பண்ணை)&oldid=25793" இருந்து மீள்விக்கப்பட்டது