வளவனூர்

வளவனூர் (ஆங்கிலம்:Valavanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வளவனூர்
—  பேரூராட்சி  —
வளவனூர்
இருப்பிடம்: வளவனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58Coordinates: 11°55′N 79°35′E / 11.92°N 79.58°E / 11.92; 79.58
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் விழுப்புரம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

16,745 (2011)

2,990/km2 (7,744/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.6 சதுர கிலோமீட்டர்கள் (2.2 sq mi)

76 மீட்டர்கள் (249 அடி)

இணையதளம் www.townpanchayat.in/valavanur

அமைவிடம்

வளவனூர் தேர்வுநிலை பேரூராட்சி, விழுப்புரம் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி கடலூர், புதுச்சேரி, திருச்சி, சேலம், சென்னை ஆகிய மாவட்டங்களை போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்

பேரூராட்சியின் அமைப்பு

5.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 75 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,913 வீடுகளும், 16,745 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,003பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,077 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,975 மற்றும் 109 ஆகவுள்ளனர்.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. வளவனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Valavanur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
  5. "Valavanur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://tamilar.wiki/index.php?title=வளவனூர்&oldid=97577" இருந்து மீள்விக்கப்பட்டது