வந்தனா சீனிவாசன்

வந்தனா சீனிவாசன், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். தனித்தன்மை கொண்ட குரலமைப்பும், சுயாதீன பாடகியாகவும் இருக்கும் இவர், தென்னிந்திய திரைப்படத் துறையில் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

வந்தனா சீனிவாசன்
Vandana MM Photo.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்வந்தனா சீனிவாசன்
பிறப்பு22 மே 1988
இசை வடிவங்கள்கருநாடக இசை இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2011 ஆம் ஆண்டு முதல்

வாழ்க்கை வரலாறு

வந்தனா, சிறுவயதிலிருந்து உயர்நிலைப் பள்ளியை முடிக்கும் வரை தனது குருவான திருமதி சீதா கிருஷ்ணனிடமிருந்து கர்நாடக பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றுள்ளார். கல்லுரிப்படிப்பிற்க்காக 2006 ஆம் ஆண்டில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் (மெட்ராஸ் பல்கலைக்கழகம்) உளவியல் பாடப்பிரிவில் சேர்ந்த அவர், இந்தியாவின் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளர். அங்கே, மற்றொரு குருவான, திருமதி தனுஸ்ரீ சாஹாவின் கீழ் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றுள்ளார். இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்வி நிலையத்தில் நிறுவன மற்றும் சமூக உளவியலில் முதுகலைப் பட்டம் பெற 2009 ஆம் ஆண்டில் இலண்டனுக்குச் சென்று அங்கும் பல்வேறு இசை தாக்கங்களை வெளிப்படுத்தி குறிப்பாக பங்களாதேச இசையை ஆராய்ந்துள்ளார். 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக்குத் திரும்பியதை, அவர் ஒரு சுயாதீன இசைக்கலைஞராகவும் பின்னணிப் பாடகியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.[1][2]

2017 ஆம் ஆண்டில் இசைக்கலைஞரின் வாழ்க்கைகளைப் பற்றிய உரையை டெட் கருத்தரங்குகளில் பகிர்ந்துள்ளார்.[3]

மியூசிகலோரி தயாரிப்புகள் என்ற பெயரில் பிற இசைப்பாடகர்கள், பின்னணி பாடகர்கள், இசைவல்லுனர்களை இணைத்து ஆன்மாவை உருக்கும் மெல்லிசையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் பட்டத்தில்[4] என்ற தொழிலதிபரை மணந்துள்ள வந்தனா, தனது கணவருடன் இணைந்து இன்ஸ்ட்டாகிராம்இணையதளத்தில், அனஸ்டோரிஸ்ஒன்லைன் என்ற பெயரில் பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் விற்பனையும் செய்து வருகிறார்.[5]

இசைப்பட்டியல்

பின்னணிப் பாடல்

ஆண்டு பாடல் ஆல்பம் இசையமைப்பாளர்
2012 "பொல்லாத குதிரை" மதுபான கடை வேத் சங்கர்
ஒரு பாதி கனவு தாண்டவம் ஜி.வி.பிரகாஷ் குமார்
2013 "உன்னாலே" ராஜா ராணி ஜி.வி.பிரகாஷ் குமார்
"அவதா பையா" பரதேசி ஜி.வி.பிரகாஷ் குமார்
2014 "சப்கே வினாதி (பெண் பதிப்பு)" என்னதான் பேசுவதோ டி. இம்மான்
"உன்ன இப்போ பார்க்கணும்" கயல் டி. இம்மான்
"பாத்து பாத்து" மஞ்சா பாய் என்.ஆர்.ரகுநந்தன்
"மழகதா" ஒரு ஊர்ல ரெண்டு ராஜா டி. இம்மான்
"பெண்ணே ஓ பெண்ணே" நான் சிகப்பு மனிதன் ஜி.வி.பிரகாஷ் குமார்
"கூட மேல கூட வச்சு" ரம்மி டி. இம்மான்
2015 "எருமமாட்டு பயலே" கமரகட்டு எஃப்.எஸ்.ஃபைசல்
உந்தன் முகம் (இசையமைப்பாளர் பதிப்பு) சார்லஸ் ஷபிக் கார்த்திகா சித்தார்த்த மோகன்
2016 திருடா திருடா ஆரம்பமே அட்டகாசம் ஜெயா கே தாஸ்
சாக்கிய சகியா குப்பேடாந்த பிரேமா நவநீத் சுந்தர்
"கருவாகாது கருவாயா" மருது டி. இம்மான்
"ஆசை காதல் ஆருயிரே" வாகா டி. இம்மான்
"அடடா இதுயென்ன" தோதாரி டி. இம்மான்
"உன் காதல் இருந்தால் போதும் (மறுபதிவு)" காவலை வேண்டம் லியோன் ஜேம்ஸ்
2017 இதுக்குத்தானா அதாகப்பட்டது மகாஜனங்களே டி. இம்மான்
நீ இல்லை என்றாள் 8 தோட்டக்கல் சுந்தரமூர்த்தி கே.எஸ்
அடி போடி சண்டாளி பொட்டு அம்ரிஷ்
2018 சண்டக்காரி கடைக்குட்டி சிங்கம் டி. இம்மான்
2019 தலபு தழுபு ப்ரோச்சேவரேவருரா விவேக் சாகர்
தாஜ சமாச்சாரம் நடசார்வபௌமா டி. இமான்
2021 அலங்காலங்குருவி புலிக்குத்தி பாண்டி என்.ஆர்.ரகுநந்தன்
மருதாணி அண்ணாத்தே டி.இம்மான்
2022 தாலாட்டு பாடும் சாமி நாட்குறிப்பு ரான் ஈதன் யோஹான்
"உள்ளம் உருகுதையா"" ஈதர்க்கும் துணிந்தவன் டி.இம்மான்
சூரவலி (பெண் பதிப்பு) ரெஜினா சதீஷ் நாயர்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வந்தனா_சீனிவாசன்&oldid=27803" இருந்து மீள்விக்கப்பட்டது