வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்

வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், கோயில் நகரமான மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மட்டும் இருக்கின்றனர். இரண்டு துவாரகபாலகர்கள் வாயில் நிற்க அம்மன் சன்னதியும், அதற்கு முன்புறம் அகலமான முற்றமும் கொண்டுள்ளது.[1]

வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்
பெயர்
பெயர்:மாரியம்மன் திருக்கோயில்
தமிழ்:வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ் நாடு
மாவட்டம்:மதுரை
அமைவு:வண்டியூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:மாரியம்மன்
சிறப்பு திருவிழாக்கள்:தைப்பூசம் அன்று தெப்பத்திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:1

திருவிழாக்கள்

தைப்பூசத்தன்று வண்ணமயமான தெப்பத்திருவிழா இதன் தெப்பக்குளத்தில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதத்தில் பத்து நாள் பிரமோற்சவத்திருநாளும், பூச்சொரிதல் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.[2]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்