வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் (திரைப்படம்)
வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் ( transl. வசந்தி, லக்ஷ்மி மற்றும் நான் ) என்பது வினயன் இயக்கி, 1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள மொழித் திரைப்படமாகும். இப்படத்தில் கலாபவன் மணி, காவேரி, பிரவீணா, சாய் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது : எம்.ஜி. ஸ்ரீகுமார் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான விருதை வென்றார்.கலாபவன் மணிக்கு சிறப்பு நடுவர் விருது .கிடைத்தது.
வசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும் | |
---|---|
இயக்கம் | வினயன் |
தயாரிப்பு | கபீர் லத்தீப் விந்த்யன் |
திரைக்கதை | J. பள்ளசெரி |
இசை | மோகன் சித்தாரா |
நடிப்பு | கலாபவன் மணி காவேரி பிரவீணா சாய்குமார் |
ஒளிப்பதிவு | அழகப்பன்.என். |
படத்தொகுப்பு | ஜி.முரளி |
கலையகம் | திரிவேணி புரடக்சன்ஸ் |
விநியோகம் | சர்கம் இசுபீடு ரிலீஸ் |
வெளியீடு | மே 27, 1999 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹45 லட்சம்[1] |
மொத்த வருவாய் | ₹3.5 கோடி[1] |
வசந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும் தமிழில் காசி என்றும், தெலுங்கில் சீனு வசந்தி லட்சுமி என்றும், கன்னடத்தில் நம்ம ப்ரீத்திய ராமு என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
நடிகர்கள்
- கலாபவன் மணி இராமுவாக
- காவேரி லட்சுமியாக
- பிரவீணா வசந்தியாக
- பரத் கோபி
- சாய்குமார் தாமசாக
- வாணி விச்வநாத்
- இந்த்ரன்ஸ்
- ஜனார்த்தனன் கிருஷ்ணனாக
- மேகநாதன்
- பிரியா
- கிருஷ்ணகுமார் சுலைமானாக
- அகச்டின்
- மீனா கணேசு
- பிரியங்கா அனூப்
- ஓமனா யோசப்
- விக்னேசு
- சுவாதி நாராயணன் சிறு பெண் வசந்தியாக
- மஞ்சுசா மோகன்தாசு இளம்பெண் லட்சுமியாக
வெளியீடு
இப்படம் 27 மே 1999 அன்று வெளியானது.
திரைப்பட நுழைவு சீட்டு விற்பனை வசூல்
இப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.[2]
பாடல்கள்
இப்படத்தின் பாடல்கள் யூசப் அலி கெச்சேரியின் வரிகளுடன் மோகன் சித்தாராவால் இசையமைக்கப்பட்டது.. இந்த ஒலிப்பதிவை 'சர்கம் ஸ்பீடு ஆடியோஸ்' விநியோகித்துள்ளது.[3]
"சாந்துபொட்டும் சங்கிலிசும்" பாடலுக்காக எம்.ஜி.ஸ்ரீகுமார் இரண்டாவது முறையாக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார் .
பாடல் | பாடகர்(கள்) | ராக(கள்) |
---|---|---|
"ஆளிலக்கண்ணா நிண்டே முரளிகா" | கே.ஜே.யேசுதாஸ் | சிந்து பைரவி |
"பிரக்ருதீஸ்வரி" | கே.ஜே.யேசுதாஸ் | |
"தேனானு நின் ஸ்வரம்" | கே.எஸ்.சித்ரா | |
"சாந்துபொட்டும் சங்கெளசும்" | எம்.ஜி.ஸ்ரீகுமார் | |
"கட்டிலே மனிதனின் தோளுகொண்டாக்கி" | கலாபவன் மணி | |
"தெங்கப்பூலும் கொக்கிலோத்துக்கி" | கே.ஜே.யேசுதாஸ், சுஜாதா மோகன் | |
"தெங்கப்பூலும் கொக்கிலோத்துக்கி" | கே.ஜே.யேசுதாஸ் | |
"கண்ணுநீரினும் சிரிக்கநாரியம்" | கே.ஜே.யேசுதாஸ் | யமுனாகல்யாணி |
"தேனானு நின் ஸ்வரம்" | கே.ஜே.யேசுதாஸ் | |
"ஆளிலக்கண்ணா நிண்டே முரளிகா" | கே.எஸ்.சித்ரா | சிந்து பைரவி |
விருதுகள்
- சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது - எம்ஜி ஸ்ரீகுமார்
- தேசிய திரைப்பட விருது – சிறப்பு நடுவர் விருது – கலாபவன் மணி
- கேரள மாநில திரைப்பட விருது – சிறப்பு நடுவர் விருது – கலாபவன் மணி
- சிறந்த நடிகருக்கான ஏசியாநெட் திரைப்பட விருது - கலாபவன் மணி
- சிறந்த துணை நடிகைக்கான ஏசியாநெட் திரைப்பட விருது - பிரவீணா
மறுஆக்கங்ககள்
வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் தமிழில் காசி (2001),[4] கன்னடத்தில் நம்ம ப்ரீத்திய ராமு (2003),[5] தெலுங்கில் சீனு வசந்தி லட்சுமி (2004),[6] மற்றும் சிங்களத்தில் சூரியா (2012) என மறு ஆக்கம் செய்யப்பட்டது.[7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 குரியகோஸ், எம். ஏ. (2019-05-20). "വാസന്തിയും ലക്ഷ്മിയും വാരിയത് മൂന്നരക്കോടി; ആകെ ചെലവ് 45 ലക്ഷം". பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.
- ↑ "Raghuvinte Swantham Rasiya will release this Friday". Rediff.com. 19 May 2011.
- ↑ "Manorama Music". www.manoramaonline.com. Archived from the original on 2008-08-02.
- ↑ "Kasi".
- ↑ "Darshan: Top five movies of the superstar you should not miss". The Times of India. 16 February 2019.
- ↑ "Seenu Vasanthi Lakshmi".
- ↑ "Kasi in Sinhala". The New Indian Express.