ழான் ஃபில்லியொசா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ழான் ஃபில்லியொசா (Jean Filliozat, 4 நவம்பர் 1906 - 27 அக்டோபர் 1982) பிரான்சில் பிறந்து தமிழுக்கு சேவை செய்தவர். மருத்துவராக 1930 முதல் 1947 வரை பணியாற்றியவர். தமிழுடன் சமக்கிருதம், பாளி, திபெத்தியம் ஆகிய மொழிகளையும் கற்றவர். இந்திய மருத்துவம் தொடர்பாக சில முக்கிய நூல்களை எழுதியுள்ளார். 1955 இல் அவர் புதுவையில் பிரெஞ்சு நிறுவனத்தை நிறுவினார். அதே சமயத்தில், 1956 முதல் 1977 வரை, அவர் பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துக்கு இயக்குநராக இருந்தார்.
ழான் ஃபில்லியொசா | |
---|---|
பிரெஞ்சு தமிழறிஞர் | |
பிறப்பு | பாரிஸ் (பிரான்சு) | 4 நவம்பர் 1906
இறப்பு | அக்டோபர் 27, 1982 | (அகவை 75)
பணி | மருத்துவர், பேராசிரியர் |
எழுதிய சில நூல்கள்
- (திருமுருகாற்றுப்படை பற்றியது) Le Tirumurukârrupatai. Pondichéry, Institut français d’indologie (PIFI, 49), 1973.
- (திருப்பாவை பற்றியது) Un texte tamoul de dévotion vishnouite. Le Tiruppāvai d’Āṇṭāl.̣ Pondichéry, Institut français d’indologie (PIFI, 45). Jean Filliozat, 1972
- (திருவிளையாடல் பற்றியது) La légende des jeux de Çiva à Madurai, d’après les textes et les peintures. R. Dessigane, P.Z. Pattabiramin et J. Filliozat, (PIFI, 19), 1960.
- Un catéchisme tamoul du XVIe siècle en lettres latines. Pondichéry, Institut français d’indologie (PIFI, 33), 1967.