லொள்ளு சபா சேசு
லொள்ளு சபா சேசு என்று பரவலாக அறியப்படும் லட்சுமி நாராயணன் (1963 - 26 மார்ச் 2024)[1] இந்திய திரைப்பட நடிகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் நடிக்கத் தொடங்கியபோது பிரபலமானவர் என்பதால் லொள்ளு சபா சேசு என்று அழைக்கப்படுகிறார்.[2][3]
லொள்ளு சபா சேசு Lollu Sabha Seshu | |
---|---|
இயற்பெயர் | இலட்சுமி நாராயணன் சேசு |
பிறப்பு | அண். 1963 |
இறப்பு | (அகவை 60) சென்னை, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
நகைச்சுவை வகை(கள்) | நகைச்சுவை |
தொழில்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சேசு தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். சில வருடங்களுக்குப் பிறகு மாறன், சந்தானம், ஜீவா உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் லொள்ளு சபாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[4][5]
திரைப்படவியல்
நடித்த திரைப்படங்கள்
- துள்ளுவதோ இளமை (2002)[6]
- ரிமோட் (2004)
- திருடிய இதயத்தை (2005)
- வீராப்பு (2007)
- நீதானா அவன் (2010)
- வேலாயுதம் (2011)
- ஜமாய் (2014)
- இந்தியா பாகிஸ்தான் (2015)
- ஏ1 (2019)
- திரௌபதி (2020)
- நாங்க ரொம்ப பிஸி (2020)
- சங்கராபுரம் (2020)
- பாரிஸ் ஜெயராஜ் (2021)
- டிக்கிலோனா (2021)
- ஆன்டி இந்தியன் (2021)
- பெஸ்டி (2022) - மெய்யப்பன்
- குலு குலு (2022)[7]
- கடமையை செய் (2022)
- நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (2022)[8]
- சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் (2023)
- கிக் (2023)
- ராயர் பரம்பரை (2023)
- கன்னித்தீவு (2023)
- வடக்குப்பட்டி ராமசாமி (2024)
- பூமர் அங்கிள் (2024)[9]
- இரவு
- மெடிக்கல் மிராக்கல்[10]
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
ஆண்டு | தொடர் | கதாபாத்திரத்தின் பெயர் | தொலைக்காட்சி | குறிப்பு |
---|---|---|---|---|
2004 | சூப்பர் டூப்பர் | சன் தொலைக்காட்சி | ||
2005-2008 | லொள்ளு சபா | விஜய் தொலைக்காட்சி | ||
2006 | சின்ன பாப்பா பெரிய பாப்பா | சன் தொலைக்காட்சி | ||
2023 | ஜோக்கிங் பேட் | கஸ் அண்ணாச்சி | நெற்ஃபிளிக்சு | ப்ரேக்கிங் பேட்-டின் நகைச்சுவை காணொளி[11] |
மேற்கோள்கள்
- ↑ M, Marimuthu. "Actor Seshu: 'லொள்ளு சபா' புகழ் நடிகர் சேஷூ மாரடைப்பால் மரணம்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 26 March 2024.
- ↑ "'ஒரு பெயரைக் கூட ஒழுங்கா போடத் தெரியாதா?' – விஜய் டிவியை வறுத்தெடுத்த 'லொள்ளு சபா' நடிகர்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ லீ, தார்மிக். "``இந்த ஒரு டயலாக்கைச் சொல்ல ஒரு நாள் ஆச்சு - `லொள்ளு சபா' சேஷு கலாய்". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ "'லொள்ளு சபா' புகழ் சேஷு மகன் இயக்கிய குறும்படம் – சந்தானம் படத்தை இயக்க சொல்லலாமே!! (வீடியோ)". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ NADU, ABP (2022-04-17). "'இவன் ஹீரோ; அவன் டைரக்டர்; நான் விஷம் குடிக்கலாம்னு நினைச்சேன்' - லொள்ளு சபா சேஷு ஓபன் டாக்!". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ நானும் தனுஷும் ஒரே படத்தில் தான் அறிமுகம் | Lollu sabha seshu Part-01, பார்க்கப்பட்ட நாள் 2022-07-16
- ↑ "Santhanam's upcoming film 'Gulu Gulu' enters post-production and gears up for release! - Tamil News". IndiaGlitz.com. 2022-03-23. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ "Vadivelu's Naai Sekar Returns begins; cast revealed - Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ "Boomer Uncle Movie Review : Boomer Uncle aims for absurdity, lands in exhaustion". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
- ↑ "யோகிபாபு நடிக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' படப்பிடிப்பு தொடக்கம்". Hindu Tamil Thisai. 16 June 2022. பார்க்கப்பட்ட நாள் 26 March 2024.
- ↑ "Joking Bad: தி பாய்ஸ் ஆர் பேக்... வருகிறது ஜோக்கிங் பேட்". Tamil Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.