லிசா ரே

லிசா ரே (இந்தி: लीसा रे), 4 ஏப்ரல் 1972 அன்று பிறந்த[1] இவர் ஒரு கனடிய நடிகை மற்றும் முன்னாள் ஆடை அலங்கார மாடல் ஆவார். 23 ஜூன் 2009 அன்று அவருக்கு பல்சாற்றுப்புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சிகிச்சையின் முதல் சுழற்சி 2 ஜூலை 2009 அன்று தொடங்கியது.[2]

Lisa Ray
Lisa Ray wearing Farley Chatto - Heart and Stroke Foundation - The Heart Truth celebrity fashion show - Red Dress - Red Gown - Thursday February 8, 2012 - Creative Commons.jpg
இயற் பெயர் Lisa Ray
பிறப்பு ஏப்ரல் 4, 1972 (1972-04-04) (அகவை 52)
Toronto, Ontario, Canada
தொழில் Actress, Model
நடிப்புக் காலம் 2001 – present
இணையத்தளம் http://lisaraniray.com/
அமெரிக்காவின் பிறந்த நடிகையும் ஆடை அலங்கார வடிவமைப்பாளரான லிசாரே தொழில் வாழ்க்கைக்காக இப்பெயரில் அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

கனடாவின் ஆண்டரியோவில் உள்ள டொரோண்டோவில் இந்திய மரபு பெங்காலி தந்தை மற்றும் பூலிஷ் தாயாருக்கும் லிசா ரே பிறந்தார். மேலும் டொரொண்டோவின் புறநகர் பகுதியான எடோபிகோக்கில் வளர்ந்தார்.[3] ஐந்து ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளிகளில் பயின்று கல்விரீதியாக புலமை பெற்ற அவர் அவற்றில் நான்கு ஆண்டுகளில், எட்டோபிகோக் கல்வி நிறுவனம், ரிச்வியூ கல்வி நிறுவனம் மற்றும் சில்வர்துரோன் கல்வி நிறுவனம் போன்ற மூன்று வேறுவேறு உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயின்றார்.[4]

லிசா அவரது தாய்வழிப் பாட்டியுடன் பூலிஷில் பேசுவார். மேலும் அவரது சினிமாவில் ஆர்வம் கொண்ட தந்தையுடன் பெடரிகோ பெலினி மற்றும் சத்யஜித் ரே ஆகியோரின் திரைப்படங்களை பார்த்துள்ளார்.[3] அவரது 16 ஆவது வயதில் வடிவழகு செய்யத் தொடங்கி இந்தியாவிற்கு குடும்பத்துடன் விடுமுறைக்கு வந்திருந்த சமயத்தில் கூட்டத்தில் ரே ஒரு முகவரால் இனம் கண்டுகொள்ளப்பட்டார்.[3]

தொழில் வாழ்க்கை

லிசா ரே முதன் முதலில் பொதுமக்கள் கவனத்திற்கு வந்தது, ஒரு பாம்பே டையிங்குக்கான விளம்பரத்தில் ஆகும். அதில் கரன் கபூருடன் உயர்ந்து-வெட்டப்பட்டிருந்த கருப்பு நீச்சலுடை[2] அணிந்து தோன்றினார்.[5] பின்னர் பத்திரிக்கை தொழில் பயில்வதற்கு பல்கலைகழகத்தில் சேர்வதற்காக லிசா கனடா சென்றார். ஆனால் ஒரு கார் விபத்தில் அவரது தாயார் காயமடைந்ததால் அந்தத் திட்டங்கள் அனைத்தையும் அவர் ஒதுக்கினார். மாறாக அவர் இந்தியா திரும்பி பேவாட்ச் -பாணி சிவப்பு நீச்சலுடை அணிந்து கிளாட் ரேக்ஸின் மேலட்டையில் தோன்றினார். இந்தப் பரபரப்பூட்டும் நிகழ்ச்சியானது அதிகமான பத்திரிகை மேலட்டைகளில் லிசா தோன்றுதற்கு காரணமாக அமைந்தது. அவரது சொந்த நிகழ்ச்சி-வணிக செயல்திட்டத்தை கவனிப்பவராக லிசாவின் செய்தித்தொடர்பாளர் இருந்து அவரது வேலை மற்றும் ஒப்பந்தங்களை கவனித்து வந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா வின் வாக்கெடுப்பில் "புத்தாயிரத்தில் ஒன்பதாவது மிகவும் அழகிய பெண்" என லிசாவின் பெயர் இடம்பெற்றது. அதில் சிறந்த பத்தில் இடம்பெற்ற ஒரே மாடல் இவர் மட்டுமே ஆவார்.[4]

அவரது முதல் திரைப்படத் தொடக்கமாக 1994 ஆம் ஆண்டு நேதாஜி எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக சிறிய பாத்திரத்தில் லிசாரே தோன்றினார். இது கவனிக்கப்படாமல் போனது. பின்னர் குறிப்பிட்ட பாத்திரங்களில் நடித்த பிறகு[6] 2001 ஆம் ஆண்டு கசூர் எனும் திரைப்படத்தில் அஃப்தாப் சிவதாசானி[5] க்கு ஜோடியாக லிசா அவரது முதல் பாலிவுட் தொடக்கத்தைத் தந்தார். லிசாவால் இந்தி பேச முடியாததால் அவரது குரலுக்குப் பதிலாக திவ்யா தத்தாவின் குரல் பின்னர் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.[7] அந்தத் திரைப்படத்தில் அவரது நடிப்பு தீபா மேத்தாவால் அங்கீகரிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு ரொமாண்டிக் இந்திய-கனடிய திரைப்படம் பாலிவுட்/ஹாலிவுட் டில் ரேவை அவர் நடிக்கவைத்தார்.[3] 2005 ஆம் ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமான வாட்டரில் மேத்தாவுடன் லிசா மீண்டும் பணிபுரிந்தார். அதில் அவரது சொந்தக் குரலில் இந்தி பேசியிருந்தாலும் திரைப்படத்தின் இறுதி வெட்டில் அவரது குரல் மாற்றி ஒலிப்பதிவு செய்யப்பட்டது.[7] அதற்குப் பிறகு கனடா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கத் தயாரிப்புகளில் அவர் பணிபுரிந்தார்.

ஆல் ஹேட் டில் பண்ணைப் பெண்ணாக நடித்தது. எ ஸ்டோன்'ஸ் த்ரோ வில் பள்ளி ஆசிரியை மற்றும் த வேர்ல்ட் அன்சீனில் 50-களின் தென் ஆப்பிரிக்க ஒதுக்கப்பட்ட இனத்தில் வீட்டில் இருக்கும் பெண் & சமிம் சரிப்பால் இயக்கப்பட்டு வேடிக்கையாக தலைப்பிடப்பட்ட "ஐ காண்'ட் திங்க் ஸ்ட்ரைட்"டில் ஒரு கிறிஸ்துவ-அரப் லெஸ்பியனாக நடித்தது உள்ளிட்டவை அண்மை காலங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களாகும்.

2007 ஆம் ஆண்டு கில் கில் ஃபாஸ்டர் ஃபாஸ்டர் திரைப்படத்தை லிசா நிறைவுசெய்தார். இது ஜோல் ரோஸ்ஸால் அதே பெயரில் எழுதப்பட்ட விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்ற நாவலால் ஈர்க்கப்பட்டு நாயரால் எடுக்கப்பட்ட சமகாலத்திய திரைப்படமாகும்.

USA நெட்வொர்க் தொடரான சைக்கில் கெளரவப்பாத்திரம் ஏற்று அவர் நடித்தார். ஜே சந்திரசேகரால் இயக்கப்பட்ட இந்தத் தொடர் 30 நவம்பர் 2009 அன்று ஒளிபரப்பப்பட்டது.

1996 ஆம் ஆண்டு நஸ்ரத் ஃபாடே அலி கானின் பிரபலமான பாடலான "அஃப்ரீன் அஃப்ரீன்" இல் லிசா நடித்தார்.

ஹலோ பத்திரிகையின் கனடிய பதிப்பில் நாட்டின் '50 மிகவும் அழகான மனிதர்கள்' பட்டியலில் லிசா ரேவும் இடம் பெற்றிருந்தார்.

சொந்த வாழ்க்கை

லிசா ரே அவரது நீண்ட காலக் கூட்டாளியான மிகவும் வெற்றிகரமான ஃபேஷன் புகைப்படக்கலைஞர் பாவ்லோ ஜம்பல்டியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 23 ஜூன் 2009 அன்று அவருக்கு பல்சாற்றுப்புற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நோயெதிர் பொருட்களை உற்பத்திசெய்யும் ஃபிளாஸ்மா செல்களாக அறியப்படும் வெள்ளை இரத்த செல்களில் வரும் புற்றுநோயாகும். இது மிகவும் அறிய மற்றும் குணப்படுத்த முடியாத நோயாகும். [8][9]

யூனிகுளோப் எண்டெர்டெயின்மெண்டின் 1 எ மினிட் எனத் தலைப்பிடப்பட்ட மார்பு புற்றுநோய் ஆவண-நாடகத்தில் ரே நடிக்கப்போகிறார். இது 2010 ஆம் ஆண்டு வெளியாவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.[10] நம்ரதா சிங் குஜ்ராலால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு பிறகும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒலிவியா நியூடன்-ஜான், தியஹான் கரோல், மெலிசா எத்த்ரிட்ஜ், மும்தாஜ் (நடிகை) மற்றும் ஜேக்லின் சுமித் மேலும் வில்லியம் பால்டுவின், டேனியல் பால்டுவின் மற்றும் பிரியா தத் போன்ற புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளவர்கள் இதில் இடம்பெறுகின்றனர். கெல்லி மெக்கில்ஸ்ஸால் இந்தப் பகுதி எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இதில் மோர்கன் பிரிடனியும் இடம்பெறுகிறார்.

விருதுகள்

  • 2002 ஆம் ஆண்டு நடந்த டொரோண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் வருங்கால நட்சத்திரமாக வாக்களிக்கப்பட்டார்.[11]
  • டைம்ஸ் ஆப் இந்தியா வால் புத்தாயிரத்தின் சிறந்த பத்து உயர்ந்த அழகிய இந்தியப் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வான்கோவர் விமர்சகர்கள் வட்டத்தால் வாட்டர் என்ற கனடிய திரைப்படத்திற்காக சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் (குறிப்பு: imdb.com, குளோவ் பத்திரிகை, டிசம்பர் 2007).

திரைப்பட விவரங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1994 ஹன்ஸ்டெ கெல்டெ ரேகா
நேதாஜி பிரியா தமிழ் மொழித் திரைப்படம்
2001 கஷோர் சிம்ரன் பார்கவ் இந்தி மொழித் திரைப்படம்
2002 தக்கரி தோன்கா புவனா தெலுங்கு மொழித் திரைப்படம்
2002 பாலிவுட்/ஹாலிவுட் சூ (சுனிதா) சிங்
2002 பால் & செயின் செய்மா
2004 யுவராஜா லவ்லி கன்னட மொழித் திரைப்படம்
2005 த ஸ்டாண்டர்டு பாலிவுட் நடிகை TV தொடர்
வாட்டர் கல்யாணி
சீக்கிங் ஃபியர் நைனா அட்வல்
2006 த ஃப்ளவர்மேன் லூயிஸ்
குவார்டர் லைஃப் கிரிஸிஸ் ஏஞ்சல்
எ ஸ்டோன்'ஸ் த்ரோ லியா
2007 ஐ கான்'ட் திங்க் ஸ்ட்ரைய்ட் தலா
ப்ளட் டைஸ் எலினா TV தொடர், 1 எபிசோட்
த வேர்ல்ட் அன்சீன் மிரியம்
2008 கில் கில் பாஸ்டர் பாஸ்டர் ஃப்ளேயர்
டொரோண்டோ ஸ்டோரீஸ் பெத்
த சம்மிட் ரெபேகா டவுனி TV குறுந் தொடர்
2009 சோம்னோலென்ஸ்
டிஃபெண்டர் டாம்னிக் பால்
குக்கிங் வித் ஸ்டெல்லா மாயா சோப்ரா
லெட் த கேம் பிகின் ஈவா நிறைவடைந்தது
2010 ட்ராடெர் கேம்ஸ் சாரா தயாரிப்புக்கு பிந்தைய பணிகள்

மேற்கோள்கள்

  1. "Lisa Ray finds strength in blogging about cancer". CTV News. 2009-09-14 இம் மூலத்தில் இருந்து 2009-12-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091221100619/http://www.ctv.ca/servlet/ArticleNews/story/CTVNews/20090914/TIFF_lisa_ray_090914?s_name=&no_ads=. பார்த்த நாள்: 2009-11-15. "The 37-year-old..." 
  2. 2.0 2.1 Adarsh Chauhan (2009-09-09). "Lisa Ray diagnosed with incurable cancer". Jai Bihar இம் மூலத்தில் இருந்து 2009-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091118040416/http://jaibihar.com/lisa-ray-diagnosed-with-cancer/12143/. பார்த்த நாள்: 2009-09-09. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Chatelaine.com : த தரோலி கனடியன் சாம் ஆப் லிசா ரே" இம் மூலத்தில் இருந்து 2008-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080914020413/http://en.chatelaine.com/english/life/article.jsp?content=20070723_142659_4976. 
  4. 4.0 4.1 Liam Lacey (2002-09-12). "Just a pinch of spice". The Globe & Mail இம் மூலத்தில் இருந்து 2002-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020921001620/http://www.theglobeandmail.com/special/filmfestival/2002/news/20020912ray.html. பார்த்த நாள்: 2008-11-18. 
  5. 5.0 5.1 Anand Sankar (2005-07-30). "A ray of hope for her". The Hindu இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604233519/http://www.hindu.com/mp/2005/07/30/stories/2005073002440300.htm. பார்த்த நாள்: 2008-11-18. 
  6. Liz Braun (2008-11-07). "Lisa Ray shines in the spotlight". Toronto Sun. http://jam.canoe.ca/Movies/Artists/R/Ray_Lisa/2008/11/07/7334866-sun.html. பார்த்த நாள்: 2008-11-18. 
  7. 7.0 7.1 P. Karthik (2008-02-20). "I’m loving it: Lisa Ray". Times of India. http://timesofindia.indiatimes.com/India_Buzz/Im_loving_it_Lisa_Ray/articleshow/2795774.cms. பார்த்த நாள்: 2008-11-18. 
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120216014512/http://www.torontolife.com/features/24-hours-with-lisa-ray/. 
  9. http://timesofindia.indiatimes.com/India_Buzz/Im_loving_it_Lisa_Ray/articleshow/2795774.cms
  10. http://www.contactmusic.com/news.nsf/story/indian-star-rallies-celebrity-support-for-cancer-movie_1118440
  11. Constance Droganes (2007-09-10). "Canadian actress Lisa Ray goes a little bit country in 'All Hat'". CTV News இம் மூலத்தில் இருந்து 2009-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090318023645/http://www.ctv.ca/servlet/ArticleNews/story/20070910/ENT_tiff_LISARAY_080910/20070912?s_name=tiff2007. பார்த்த நாள்: 2008-11-18. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லிசா_ரே&oldid=23368" இருந்து மீள்விக்கப்பட்டது