லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்
இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இலால்குடியில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]
இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
படிமம்:Lalgudisaptarishisvarartemple.jpg | |
புவியியல் ஆள்கூற்று: | 10°52′13.6″N 78°49′13.3″E / 10.870444°N 78.820361°ECoordinates: 10°52′13.6″N 78°49′13.3″E / 10.870444°N 78.820361°E |
பெயர் | |
பெயர்: | இலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | இலால்குடி |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சப்தரிஷீஸ்வரர் |
தாயார்: | பெரியநாயகி |
தல விருட்சம்: | மகிழ மரம் |
தீர்த்தம்: | அக்னித் தீர்த்தம் |
இறைவன், இறைவி
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்ற இக்கோயிலில் உள்ள இறைவன் சப்தரிஷீஸ்வரர் ஆவார். இறைவி மஹாசம்பத் கௌரி ஆவார். [1] இறைவி பெரிய நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.
சிறப்பம்சம்
தமிழகத்தில் இக்கோயிலிலும், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயிலிலும், வாலீஸ்வரர் கோயிலிலும் கட்வங்கம் ஆயுதத்துடன் சிவ வடிவங்கள் காணப்படுகின்றன.
பிற சன்னதிகள்
இக்கோயிலில் விநாயகர், முருகன் உடன் வள்ளி தெய்வானை, ஐயப்பன், தட்சணாமூர்த்தி, கால பைரவர், விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி பிரம்மா, 63 நாயன்மார்கள், ஆஞ்சநேயர் , நவக் கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.
பூஜைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திறக்கும் நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- கோயில் அமைவிடம்
- கோயில் வலைத்தளம் பரணிடப்பட்டது 2020-02-24 at the வந்தவழி இயந்திரம்