லக்சுமன் கதிர்காமர்

லக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். 13 ஆகஸ்ட் 2005 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை விடுதலைப் புலிகள் அமைப்பினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது.[2]

லக்சுமன் கதிர்காமர்
Kadirgamar.jpg
பதவியில்
1988–1993
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 12, 1932
கண்டி,இலங்கை[1]
இறப்புஆகஸ்ட் 12, 2005
கொழும்பு, இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திர கட்சி
முன்னாள் கல்லூரிபுனித திரித்துவக் கல்லூரி, கண்டி
வேலைஅரசியவாதி
தொழில்சட்டத்தரணி
இணையத்தளம்http://www.kadirgamarinstitute.lk/

தொடக்க வாழ்க்கை

கதிர்காமர் மானிப்பாயை சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமருக்கும் பரிமளம் கதிர்காமருக்கும்[3] ஆறாவதும் கடைசி[4] பிள்ளையாக கண்டியில்[1] 1932 ஏப்ரல் 12 ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியை கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பயின்ற கதிகாமர் கல்லூரி துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் கல்லூரி ரக்பி அணியினதும் அங்கத்தராக இருந்தார். கல்லூரி தடகள விளையாட்டுக்களிலும் பங்குபற்றி வந்தார். 1950 ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ரைட் தங்கப்பதக்கத்தை கதிர்காமர் வென்றார்.[4]

சட்டக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துடுப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பட்டப்படிப்பின் பின் இலங்கை நீதவானின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்ற கதிர்காமர் இன்னர் டெம்பள் (Inner Temple) வழையாக சட்டத்தரணியாக பதவியேற்றார். அதே வேலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியிலும் இணைந்துக் கொண்டார். இதன் போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஆக்சுபோடு பல்கலையின் மாணவர் ஒன்றிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[4]

வாழ்க்கை சுருக்கம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Lakshman Kadiragamar - Who Was He?". www.sinhale.com இம் மூலத்தில் இருந்து 2008-05-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080506091533/http://www.sinhale.com/lakshman_kadiragamar.htm. பார்த்த நாள்: 2008-05-18. 
  2. "Senior Sri Lanka minister killed". bbc. 13 August 2005. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4147196.stm. பார்த்த நாள்: 2008-05-18. 
  3. "Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar". TamilNet. 13 August 2005. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=15615. பார்த்த நாள்: 2008-05-18. 
  4. 4.0 4.1 4.2 Jeyaraj, D.B.S. (Aug 21, 2005). "Lakshman Kadirgamar [1932 - 2005"]. TamilWeek இம் மூலத்தில் இருந்து 2007-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071014010955/http://tamilweek.com/Lakshman_Kadirgamar_0014.html. பார்த்த நாள்: 2008-05-18. 

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
அப்துல் காதர் சாவுல் அமீட்
இலங்கை வெளிநாட்டமைச்சர்
1994–2001
பின்னர்
டிரோன் பர்னான்டோ
முன்னர்
டிரோன் பர்னான்டோ
இலங்கை வெளிநாட்டமைச்சர்
2004–2005
பின்னர்
அனுரா பண்டாரநாயக்கா
"https://tamilar.wiki/index.php?title=லக்சுமன்_கதிர்காமர்&oldid=24444" இருந்து மீள்விக்கப்பட்டது