ரோஹிணி (திரைப்படம்)

ரோகிணி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாதுரி தேவியின் மதராஸ் ஆர்ட் புரொடக்சன்சு தயாரிப்பில், கமல் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. இது பங்கிம் சந்திர சட்டர்ஜியின் கிருஷ்ணகாந்தின் உயில் என்ற வங்க மொழிப் புதினத்தின் தழுவல். இப்படம் 5 நவம்பர் 1953 இல் வெளியாகி வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

ரோகிணி
இயக்கம்கமல் கோஷ்
தயாரிப்புஎஸ். முகர்ஜி
மெட் ராஸ் ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
இசைஜி. ராமநாதன்
கே. வி. மகாதேவன்
டி. சி. தத்
நடிப்புஎஸ். வி. ரங்கராவ்
சகஸ்ரநாமம்
எஸ். ஏ. நடராஜன்
லங்கா சத்தியம்
மாதுரி தேவி
ஜி. வரலட்சுமி
சி. கே. சரஸ்வதி
டி. பி. முத்துலட்சுமி
ராஜசுலோச்சனா
வெளியீடுநவம்பர் 2, 1953
ஓட்டம்.
நீளம்16835 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

செல்வந்தர் ஒருவர் தன் சொத்தை தன் மீது வெறுப்பு கொண்ட மகனுக்குத் தர விருப்பமில்லாமல் தன் விதவைத் தங்கைக்குத் (ரோஹிணி) தர விழைகிறார். செல்வந்தரின் மகன் ரோஹிணியை ஏமாற்றி, அசல் உயிலை எடுத்துக் கொண்டு போலி உயிலை வைத்துவிடுகிறார். செய்தியறிந்த ரோஹிணி, போலியை அசல் மூலம் மாற்ற முயற்சிக்கிறாள். இடையிடையே ஆள்கடத்தலும், கொலையும் நிகழ்கின்றன.

நடிகர்கள்

தி இந்துவில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி:[1]

தயாரிப்பு

ரோஹினி வங்மொழியில் பாங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட கிருஷ்ணகாந்தர் உயில் (கிருஷ்ணகாந்தின் உயில்) என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இது கமல் கோஷால் இயக்கப்பட்டது. படத்தை மெட்ராஸ் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் எஸ். முகர்ஜி தயாரித்தார்.[1] திரைக்கதையை எஸ். டி. சுந்தரம் எழுதியுள்ளார். ஏ. மருதகாசி பாடல்களை எழுத, கே. வி. மகாதேவன் மற்றும் டி. சி. தத் ஆகியோருடன் ஜி. ராமநாதன் இசையமைத்தார். கோஷ் மேற்பார்வையில் பி. எல். ராய் மற்றும் எச். எஸ். வேணு ஒளிப்பதிவு செய்தனர். ஹிராலால் நடனத்தை அமைத்தார்.[1] படத்தின் நீளம் 16,835 அடி (5,131 மீ)[2]

வரவேற்பு

ரோஹினி 5, நவம்பர், 1953 இல் வெளியானது.[3] திரைப்பட வரலாற்றாசிரியர் ரேண்டோர் கையின் கூற்றுப்படி, திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை. இருப்பினும், அவர் கதைக்களம், ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டினார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரோஹிணி_(திரைப்படம்)&oldid=37234" இருந்து மீள்விக்கப்பட்டது