ருக்மிணி கோபாலகிருட்டிணன்

ருக்மிணி கோபாலகிருட்டிணன் (Rugmini Gopalakrishnan) (பிறப்பு:1936) இந்தியாவில் கருநாடக இசையில் சரசுவதி வீணைக் கலைஞர் ஆவார்.

ருக்மிணி கோபாலகிருட்டிணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ருக்மிணி கோபாலகிருட்டிணன்
பிறந்ததிகதி 1936
பிறந்தஇடம் தமிழ்நாடு, இந்தியா
பணி வீணைக் கலைஞர்

சுயசரிதை

ருக்மிணி கோபாலகிருட்டிணன் தமிழ்நாட்டில் பிறந்தார்.. பின்னர், தனது குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்றார். இவர் காயகாசிகாமணி அரிகேசவநல்லூர் முத்தையா பாகவதரின் பேத்தியாவார். இவர் 65 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் கருநாடக இசையை கற்பித்தல், இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துதல் மற்றும் நிகழ்ச்சிகளை பதிவு செய்துள்ளார். மேலும், இவர் இந்தியாவின் சிறந்த வீணை ஆசிரியர்களில் ஒருவராவார். [1]

இவர் தனது மாமா சிறீ நெல்லை டி. வி. கிருட்டிணமூர்த்தியின் கீழ் இசை மற்றும் வாய்ப்பாட்டில் தனது ஆரம்ப பயிற்சியைத் தொடங்கினார். பத்ம பூசண் கே. எஸ். நாராயணசாமியுடன் சரஸ்வதி வீணையில் கர்நாடக இசையில் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய அரசு இவருக்கு கலாச்சார உதவித்தொகை வழங்கியது. 1954 ஆம் ஆண்டில், தனது 17 வயதில், வீணாவுக்கான முதல் அகில இந்திய வானொலி நடத்திய போட்டியில், ருக்மிணி இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத்திடமிருந்து விருதை வென்றார். 1957 முதல் 1986 வரை கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில்] பேராசிரியராகவும், இசைத் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். [2] 1987 முதல் 1990 வரை பாலக்காட்டில் உள்ள செம்பை நினைவு அரசு இசைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார்.

இவர் கோழிக்கோடு பல்கலைக்கழக கல்வி வாரியத்தின் உறுப்பினராகவும், தில்லி மற்றும் திருவனந்தபுரத்திற்கான அகில இந்திய வானொலியின் தணிக்கை வாரிய உறுப்பினராகவும் உள்ளார். மேலும் இந்திய அரசாங்கத்தின் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிடப்பட்ட கர்நாடக இசை குறித்த புத்தகங்களுக்கு கட்டுரைகளை எழுதியுள்ளார். 1954 முதல் 64 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீணை இசைகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் அகில இந்திய வானொலியின் 'ஏ' தரக் கலைஞர் என்ற தலைப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் இவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்குகிறார்.

ருக்மிணி கோபாலகிருட்டிணன் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக கற்பிப்பதோடு, பாரம்பரிய இசை அல்லது பிற கலைகளைப் படிப்பதற்கான ஒரு கல்லூரியில் வீணையைப் பற்றி விரிவுரை செய்கிறார். இவர் தனது இசைக்காக பல கௌரவங்களையும் விருதுகளையும் பெற்று வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் கருநாடக இசை விழாக்களில் வீணை இசை நிகழ்ச்சிகளை தவறாமல் வழங்குகிறார்.

பல்வேறு வித இசையமைப்பாளர்களின் 200 க்கும் மேற்பட்ட கிருதிகளைக் கொண்ட 'வீணை போதினி' என்ற தலைப்பில் இவர் தொடர்ச்சியான புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் இசை அறிவின் மதிப்புமிக்க புதையல் ஆவார்.

விருதுகள்

1954 வீணைக்கான அகில இந்திய வானொலி நடத்திய முதல் போட்டியில் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் முனைவர் இராஜேந்திர பிரசாத் வழங்கிய குடியரசுத் தலைவர் விருதினைப் பெற்றுள்ளார்.

2000இல் செம்பை நினைவு விருது பெற்றுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 89 வது சித்திரை திருநாள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சித்திரை திருநாள் சமாரக சங்க நாட்டிய கலா கேந்திரம் என்ற கௌரவ அங்கீகாரம் வழங்கப்பட்டது.

2006இல், நவரசம் சங்கீத சபை, வி.சரசம்மா விருதை வழங்கியது.

ஆதி சங்கர வேத வேதாங்க சமசுகிருத கூட்டுறவு கல்விச் சங்கம், 2006 வழங்கிய சங்கீத ரத்னா என்ற பட்டத்தை வழங்கியது.

2005இல் திருவனந்தபுத்தில் நடைபெற்ற சூரிய விழா குரு பூஜையின் தொடக்க விழாவில், பத்மசிறீ கே. ஜே. யேசுதாஸ் இவரை கௌரவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று அனைத்து கேரள பிராமணர்கள் சங்கத்தால் (மகளிர் பிரிவு) கௌரவிக்கப்பட்டது.

பத்ம பூசண் மாவேலிகரா கிருட்டிணகுட்டி நாயர் தின கொண்டாட்டங்களில் இசைக்கான சிறப்பான சேவைக்காக கௌரவிக்கப்பட்டார்.

2008இல் குரு பூஜையில் கேரளாவின் சங்கீத நாடக அகாதமியால் கௌரவிக்கப்பட்டார்.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்