ராம்தாரி சிங் திங்கர்
ராம்தாரி சிங் திங்கர் (Ramdhari Singh 'Dinkar, 23 செப்டம்பர் 1908 – 24 ஏப்ரல் 1974) இந்திய இந்தி மொழிக் கவிஞரும், கட்டுரையாளரும், தேசபக்தரும், கல்வியாளரும் ஆவார்.[1][2] இவர் மிகவும் பிரபலமான நவீன இந்திக் கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுதப்பட்ட இவரது தேசியவாத கவிதைகளின் விளைவாக இவர் கிளர்ச்சிக்கான கவிஞராக திகழ்ந்தார். தனது உற்சாகமளிக்கும் தேசபக்தி பாடல்களின் காரணத்தினால், "தேசியக் கவிஞர்" எனப் பாராட்டப்பட்டார்.[3] உருசிய மொழிக் கவிஞர் அலெக்சாந்தர் பூஷ்கினுக்கு இணையாக கருதப்பட்டார்.[4]
ராம்தாரி சிங் திங்கர் | |
---|---|
பிறப்பு | சிமாரியா, முங்கர், பீகார், இந்தியா | 23 செப்டம்பர் 1908
இறப்பு | 24 ஏப்ரல் 1974 | (அகவை 65)
பணி | கவிஞர், செயற்பாட்டாளர், அரசியல்வாதி, ஊடகவியலாளர் |
பெற்றோர் | மன்ரூப் தேவி, ரவி சிங் |
விருதுகள் | 1959:சாகித்திய அகாதமி விருது 1959: பத்ம பூசண் 1972: ஞானபீட விருது |
கையொப்பம் |
மேற்கோள்கள்
- ↑ Biography and Works anubhuti-hindi.org.
- ↑ "Sahitya Akademi Award Citation" இம் மூலத்தில் இருந்து 2016-08-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160807045558/http://www.indiapicks.com/Literature/Sahitya_Academy/Hindi/Hindi-1959.htm.
- ↑ "Special Postage Stamps on Linguistic Harmony of India". Latest PIB Releases (Press Information Bureau of the Government of India). செப்டம்பர் 1999. http://pib.nic.in/archieve/lreleng/l0999/r140999.html. பார்த்த நாள்: 26-09-2008.
- ↑ Trisha Gupta (2015-05-09). "Interview: Is fiction-writer Siddharth Chowdhury creating a new literary form?". Scroll.in. http://scroll.in/article/726247/interview-is-fiction-writer-siddhartha-chowdhury-creating-a-new-literary-form. பார்த்த நாள்: 2015-06-22.
வெளி இணைப்புகள்
- Ramdhari Singh Dinkar at Kavita Kosh பரணிடப்பட்டது 2012-06-23 at the வந்தவழி இயந்திரம்
- Dinkar at Anubhuti