ரமேஷ் அரவிந்த்
ரமேஷ் அரவிந்த் ஒரு இந்திய நடிகர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். இவர் பெரும்பாலும் கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும், சில தெலுங்கு, மலையாளம், பாலிவுட் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். ரமேஷ் சதிலீலாவதி, டூயட், அமெரிக்கா, நம்மூர மந்த்ரா ஹூவே, உல்டா பல்டா, ஹூமளே மற்றும் அம்ருத வர்ஷினி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
ரமேஷ் அரவிந்த் ರಮೇಶ್ ಅರವಿಂದ್ | |
---|---|
பிறப்பு | கும்பகோணம், தமிழ்நாடு, இந்தியா[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் | பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பேச்சாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1984 - தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | அர்ச்சனா ரமேஷ் |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
Official website |
விருதுகள்
ஆண்டு | விருது | பிரிவு/வகை | திரைப்படம் |
---|---|---|---|
1997 | கர்நாடக மாநில அரசின் விருது | சிறந்த நடிகர் | அமேரிக்கா அமேரிக்க |
1997 | பிலிம்பேர் விருது | சிறந்த நடிகர் | அம்ருத வர்சினி |
1997 | உதயா டி.வி. விருது | சிறந்த நடிகர் | ஓ மல்லிகே |
1997 | ஸ்கிரீன் வீடியோகான் விருது | சிறந்த நடிகர் | அமேரிக்கா அமேரிக்கா, அம்ருத வர்சினி (இரண்டிற்கு சேர்த்து) |
1997 | ஆந்திர மாநில அரசு வழங்கிய நந்தி விருது | சிறந்த திரைப்படத்தின் முன்னணி நடிகர் | லிட்டில் சோல்ஜர்ஸ் |
1998 | பிலிம்பேர் விருது | சிறந்த நடிகர் | ஹூமளே |
1998 | பிலிம்பேன்ஸ் அசோசியேசன் விருது | சிறந்த நடிகர் | ஹூமளே |
1999 | கர்நாடக அரசின் விருது | சிறந்த நடிகர் | ஹூமளே |
1999 | பிலிம்பேன்ஸ் அசோனியேசன் | சிறந்த நடிகர் | சம்பிரமா |
1999 | சினிமா எக்ஸ்பிரஸ் விருது | சிறந்த நடிகர் | சந்திரமுகி பிராணசகி |
2005 | ராகவேந்திரா பிரசிஷ்தனா விருது | சிறந்த கதை | அம்ருததாரே |
2006 | சன் பீஸ்ட் உதயா விருதுகள் | சிறந்த இயக்குனர் | ராமா சாமா பாமா |
2006 | சுவர்ணா திரைப்பட விருதுகள் | சிறந்த நடிகர் | ராமா சாமா பாமா |