ரத்தம் (திரைப்படம்)

ரத்தம் (Translation : Blood) இன்பினிட்டி பிலிம் வென்சர்சு தயாரிப்பில் சிஎஸ் அமுதன்[1] இயக்கியிருக்கும் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.[2][3] இத்திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கின்றார். கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கின்றார்.[4] மேலும் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் போன்றோர் இத் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். முதன் முறையாக தொழில்நுட்பத்தை கொண்டு கொலைகளைச் செய்யும் ஒரு கூலிப்படையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார் இயக்குனர்.

ரத்தம்
Raththam
இயக்கம்சி. எஸ். அமுதன்
தயாரிப்பு
  • Kamal Bohra
  • ஜி. தனஞ்செயன்
  • பிரதீப் பி
  • பங்கஜ் போக்ரா
கதைசி. எஸ். அமுதன்
இசைகண்ணன் (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுகோபி அமர்நாத்
படத்தொகுப்புடி. எசு. சுரேஷ்
கலையகம்இன்பினிடி பிலிம் வெண்ட்சர்
வெளியீடு6 அக்டோபர் 2023 (2023-10-06)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

புகழ்பெற்ற புலனாய்வுப் இதழியலாளர் விஜய் ஆண்டனி, மனைவி பிரசவ நேரத்தில் இறந்துவிட அதற்கு தனது வேலையும் ஒரு காரணம் என எண்ணி தனது வேலையைத் துறந்து தனது மகளுடன் கொல்கத்தாவில் வசிக்கின்றார். கவலையை மறக்க குடிக்கு அடிமையான விஜய் ஆண்டனியை அவரை தனது மகன் போல வளர்த்த பத்திரிக்கை நடத்தும் நிழல்கள் ரவி ஒரு நாள் சந்தித்து தனது மகன் அலுவலகத்திலேயே கொடுரமாக கொலை செய்யப்பட்டதை தெரிவிக்கின்றார். விஜய் ஆண்டனியும் சென்னைக்கு வந்து பத்திரிக்கை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்து தனக்கு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு குற்றவாளியை எவ்வாறு கண்டுபிடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரத்தம்_(திரைப்படம்)&oldid=32875" இருந்து மீள்விக்கப்பட்டது