ரணசிங்க பிரேமதாசா

சிறீ லங்காபிமான்ய ரணசிங்க பிரேமதாசா (Ranasinghe Premadasa; சிங்களம்: රණසිංහ ප්‍රේමදාස; 23 சூன் 1924 – 1 மே 1993)[1] இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் 1989 சனவரி 2 முதல் 1993 மே 1 வரை இலங்கையின் 3-வது (நிறைவேற்றதிகாரத்துடன் 2-வது) அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[2] முன்னதாக இவர் 1978 முதல் 1989 வரை ஜே. ஆர். ஜெயவர்தனாவின் அரசில் பிரதமராகப் பணியாற்றினார்.[3] 1986 இல் இவருக்கு சிறீ லங்காபிமான்ய என்ற இலங்கையின் அதியுயர் பட்டம் அரசுத்தலைவர் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா வழங்கிக் கௌரவித்தார். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இப்பட்டம் வழங்கப்பட்டது.[4] பிரேமதாசா 1993 மே 1 அன்று கொழும்பு நகரில் நடைபெற்ற மே நாள் பேரணி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தார்.[5][6] இவரது நினைவாக இவர் கொலைசெய்யப்பட்ட ஆமர் வீதியில் ஓர் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ரணசிங்க பிரேமதாசா
Ranasinghe Premadasa
Ranasinghe Premadasa.jpeg
3-ஆவது இலங்கை அரசுத்தலைவர்
பதவியில்
2 சனவரி 1989 – 1 மே 1993
பிரதமர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா
முன்னவர் ஜே. ஆர். ஜெயவர்தனா
பின்வந்தவர் டி. பி. விஜயதுங்கா
8-ஆவது இலங்கைப் பிரதமர்
பதவியில்
6 பெப்ரவரி 1978 – 2 சனவரி 1989
குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா
முன்னவர் ஜே. ஆர். ஜெயவர்த்னா
பின்வந்தவர் டி. பி. விஜயதுங்கா
கொழும்பு மத்தி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 மார்ச் 1965 – 2 சனவரி 1989
முன்னவர் ராசிக் பரீத்
பின்வந்தவர் தொகுதி நீக்கப்பட்டது
பதவியில்
19 மார்ச் 1960 – 20 சூலை 1960
முன்னவர் எம். எசு. தெமிசு
பின்வந்தவர் ராசிக் பரீத்
தனிநபர் தகவல்
பிறப்பு (1924-06-23)23 சூன் 1924
கொழும்பு, இலங்கை
இறப்பு 1 மே 1993(1993-05-01) (அகவை 68)
கொழும்பு, இலங்கை
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஏமா பிரேமதாசா
பிள்ளைகள் சஜித், துலாஞ்சலி
இருப்பிடம் சுச்சரித்தா
படித்த கல்வி நிறுவனங்கள் புனித யோசப் கல்லூரி, கொழும்பு
கையொப்பம்

மேற்கோள்கள்

அரசு பதவிகள்
முன்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
இலங்கை சனாதிபதி
1989–1993
பின்னர்
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
முன்னர்
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
இலங்கை பிரதமர்
1978–1989
பின்னர்
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
"https://tamilar.wiki/index.php?title=ரணசிங்க_பிரேமதாசா&oldid=24764" இருந்து மீள்விக்கப்பட்டது