ரகஸ்யத்ரயம்

ரகஸ்யத்திரயம் [1] என்னும் நூல் வைணவத்தின் மூன்று மந்திரங்களை விளக்கும் நூல். நூலின் ஆசிரியர் பரகால நல்லான். இவரைத் 'திருவரங்கச் செல்வனார்' என்றும், 'பரகாலாச்சார்யர்' என்றும் குறிப்பிடுகின்றனர். இவரது இந்த நூலையும் 'ரகஸ்யார்த ப்ரதீபிகை' என்றும், பரகால நல்லான் ரகஸ்யம் என்னும் வழங்குவர்.

நூல் அளவில் பெரிதாக உள்ளது. [2]. ஓம் நமோ நாராயணாய - மந்திரம் 72 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மந்திரம் [3] 126 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மந்திரம் சரமலோகம். [4] [5] இந்த மந்திரம் இந்த நூலில் 110 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. இந்த நூல் மணிப்பிரவாள நடையில் உள்ளது. [6]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 115. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. டெம்மி அளவில் 308 பக்கம்
  3. ஸ்ரீமத் நாராயணாய சரணௌ சரணம் ப்ரபத்யே
    ஸ்ரீமதே நாயாயணாய நம:
  4. இது பகவத் கீதையில் உள்ளது
  5. எல்லாக் கர்ம யோகாதி உபாயங்களையும் விட்டு என் ஒருவனையே சரண்டைவாய். நான் உன்னை உன்னுடைய பாவங்களினின்று விடுவிப்பேன். நீ சோகிக்க வேண்டிய நிமித்தம் இல்லை. - இது இந்த மந்திரத்தின் பொருள். குருச்சேத்திரப் போர்முனையில் கண்ணன் இதனை அருச்சுனனுக்கு உபதேசித்தான்
  6. பதிப்பு - ஸ்ரீ வைணவ கிரந்த முத்ராபக சபை, 1918
"https://tamilar.wiki/index.php?title=ரகஸ்யத்ரயம்&oldid=17508" இருந்து மீள்விக்கப்பட்டது