யுவலட்சுமி

யுவஸ்ரீ லட்சுமி தமிழ் திரைப்படத்துறையில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் தனது 16 ஆம் வயதில் அம்மா கணக்கு எனும் படத்தில் முதல் முறையாக நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.[1] இவர் அப்பா[2], ஆகாசமிட்டாயி, ஆருத்ரா, வேலைக்காரன் மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை

யுவஸ்ரீலட்சுமி 25 டிசம்பர் மாதம் 2000 இல் காரைக்காலில் பிறந்தார். இவர் காரைக்கால் குட் ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 2013 ஆம் ஆண்டில் தேசிய பாலஸ்ரீ விருதினைப் பெற்ற இவர் தேர்ச்சிப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.[3] இவர் சிறந்த நடனத்திற்காகவும் தேசிய விருதினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

திரைப்பட வரலாறு

யுவஸ்ரீ லட்சுமி நான்காம் வகுப்பு படிக்கும்போது பார்வை எனும் குறும்படத்தில் பார்வையற்ற ஓர் கதாப்பாத்திரமாக நடித்தார். இந்த குறும்படத்தைப் பார்த்த சமுத்திரக்கனி, நில் பாட்டி சன்னாட்டா எனும் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கமான அம்மா கணக்கு திரைப்படத்திற்கு யுவலட்சுமியை பரிந்துரை செய்தார். 2016 ஆம் ஆண்டில் அம்மா கணக்கு மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. [5] [6]இயக்குனர் சமுத்திரக்கணி இவருக்கு தனது படங்களான அப்பா (2016), அப்பா 2 ஆகியவற்றில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு அளித்தார். 2017ல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கைக் கதாப்பாத்திரத்தில் வேலைக்காரன் திரைப்படத்திலும், அம்மா கணக்கு திரைப்படத்தின் மலையாள மறு ஆக்கமான ஆகாசமிட்டாயி எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2018ல் பா. விஜயின் இயக்கத்தில் வெளிவந்த ஆருத்ரா திரைப்படத்திலும் 2019ல் வெளிவந்த காஞ்சனா 3 படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். காஞ்சனா 3 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் அண்ணன் மகளாக நடித்தார்.[7]

நடித்த படங்கள்

வருடம் திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் இயக்குநர் குறிப்பு
2016 அம்மா கணக்கு தமிழ் அபிநயா கோபால் அஸ்வினி ஐயர் திவாரி முதலில் வெளிவந்த திரைப்படம்[8]
அப்பா (திரைப்படம்) தமிழ் நீல நந்தினி சமுத்திரக்கனி [8]முதலில் நடித்த திரைப்படம்
2017 வேலைக்காரன் தமிழ் வாணி மோகன் ராஜா [8]
2017 ஆகாசமிட்டாயி

( 2016 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான அப்பா திரைப்படம் மலையாளத்தில் மறு உருவாக்கம்)

மலையாளம் அபர்ணா சமுத்திரக்கனி [8]
2018 ஆருத்ரா தமிழ் ஆருத்ரா என அழைக்கப்படும் கதாபாத்திரத்தில் இயக்குனர் பா. விஜய் அவர்களின் தங்கையாக பா. விஜய்
2019 காஞ்சனா 3 தமிழ் பாப்பா என அழைக்கப்படும் ராகவாவின் அண்ணன் மகள் ராகவா லாரன்ஸ் [9][10]
படப்பிடிப்பில் உள்ளது அப்பா 2 தமிழ் சமுத்திரக்கனி
படப்பிடிப்பில் உள்ளது 12 C மலையாளம்
படப்பிடிப்பில் உள்ளது 1948 தமிழ்

மேற்கோள்கள்

  1. "யுவசிறிலட்சுமி". https://www.newsbugz.com/yuvasri-lakshmi-wiki-biography-movies-family-profile-age-photos/. 
  2. "Yuvalakshmi". http://www.imdb.com/name/nm8240217/. 
  3. "Yuva Lakshmi" (in en). https://www.facebook.com/pages/category/Artist/actressyuvalakshmi/about/. 
  4. "Dinamalar". Dinamalar. https://cinema.dinamalar.com/tamil-news/51061/cinema/Kollywood/Yuvalakshmi-likes-to-become-a-scientist.htm. 
  5. "Amma Kanakku review. Amma Kanakku Tamil movie review, story, rating". https://www.indiaglitz.com/amma-kanakku-review-tamil-movie-20441. 
  6. "Appa Movie Child Actress" (in en-US). https://www.etceteraentertainment.in/2018/06/13/appa-movie-child-actress/. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "kanchana 3 Tamil Movie: காஞ்சனா 3ல் நடித்த ரோஸி, யுவஸ்ரீ யார் தெரியுமா? தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்க்காதீங்க!" (in ta-IN). 2019-04-22. https://tamil.indianexpress.com/entertainment/kanchana-3-tamilrockers-yuvasri-lakshmi/. 
  8. 8.0 8.1 8.2 8.3 Kumar, Ashok (2017-12-17). "Yuva Lakshmi Biography, Wiki, DOB, Family, Profile, Movies list" (in en-US). https://behindtalkies.com/yuva-lakshmi/. 
  9. "Kanchana 3", Wikipedia (in English), 2019-04-29, retrieved 2019-04-29
  10. "Exclusive biography of #YuvasriLakshmi and on his life." (in en). https://www.filmibeat.com/celebs/yuvasri-lakshmi/biography.html. 
"https://tamilar.wiki/index.php?title=யுவலட்சுமி&oldid=23249" இருந்து மீள்விக்கப்பட்டது