யானை எய்த படலம்

யானை எய்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 22 ஆவது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1386 - 1427)[1] இப்படலம் கல் யானைக்கு கரும்பு தந்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

சுருக்கம்

விக்ரமப்பாண்டியன் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்த ஒரு அரசன் பாண்டியனை போரில் தோற்கடிக்க முடியாமல் தவித்தான். அவன் சமணர்களை அழைத்து பாண்டியனின் சைவநீதியை அழிக்கவும், பாண்டியனை அழிக்கவும் யாகமொன்றை நடத்தும் படி கோரினான். சமணர்களும் கொடூர யாகம் ஒன்றை நடத்தினர். அதிலிருந்து கரிய நிறமுடைய அகோர யானை வெளிவந்தது. அது பாண்டிய தேசத்தினை அழிக்க வருவதை பாண்டியனுக்கும், மக்களும் செய்தி பரவியது.

அனைவரும் மதுரை சொக்கநாதரை வேண்டினர். சொக்கநாதர் அவர்களிடம் பதினாறு கால் மண்டபத்தினை கட்டும் படி கூறினார். மக்களும், மன்னனும் மண்டபம் கட்ட, அதிலிருந்து வேடர் வடிவில் சொக்கநாதர் அம்பு தொடுத்து யானையைக் கொன்றார்.

யானை மலையாக மாறியது.

இவ்வாறு சமணர்கள் அனுப்பிய யானையானது மலையாக மாறி யானை மலை என்றும், சிவபெருமான் தொடுத்த அம்பு நரசிங்க அம்பு என விழுந்த இடத்தில் நரசிம்மர் கோயிலும் தற்போது உள்ளது. [2]


காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யானை_எய்த_படலம்&oldid=18430" இருந்து மீள்விக்கப்பட்டது