ம. சவரிமுத்து
ம. சவரிமுத்து (பிறப்பு: சூன் 14 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற துணைப் பாதுகாவலராவார். 'நித்திலன்' எனும் புனைப்பெயரில் அறியப்பட்டவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1958 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.