ம. இராதாகிருஷ்ண பிள்ளை

ம. இராதாகிருஷ்ண பிள்ளை (M. Radhakrishna Pillai)(1911-1974) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் சென்னை மாநகரத் தந்தையாக பணியாற்றி உள்ளார். சென்னையில் உள்ள விளையாட்டரங்கம் ஒன்றிற்கு இவரது பெயரில் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கம் என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

ஆரம்ப கால வாழ்க்கை

இராதாகிருஷ்ண பிள்ளை மணியம் வெங்கடரத்னம் பிள்ளை மற்றும் அலர்மேல் மங்கை தாயார் ஆகியோருக்கு மகனாக 1911இல் பிறந்தார். இவரது தாய் வசதியான தோட்டகாடு குடும்பத்தைச் சேர்ந்தவர். இராதாகிருஷ்ண பிள்ளை இளமையாக இருந்தபோது வெங்கடரட்னம் பிள்ளை இறந்தார். பிள்ளையின் தாத்தா 1930 இல் இறந்தார்.[சான்று தேவை]

இராதாகிருஷ்ண பிள்ளை இந்து இறையியல் உயர்நிலைப்பள்ளியிலும் பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பைப் முடித்தார். 1930இல் பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். பட்டப்படிப்பைத் தொடர்ந்து, வழக்கறிஞர் வி. சி. கோபால் ரத்னத்திடம் உதவி வழக்கறிஞராக பயிற்சிபெற்றார். இவர் பெருந்தேவி தயாரம்மாளை 1936இல் திருமணம் செய்தார்.[சான்று தேவை]

மாநகரத் தந்தை

இராதாகிருஷ்ண பிள்ளை 1944–45ல் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இவர் மாநகரத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.[சான்று தேவை]

பிற்கால வாழ்வு

இராதாகிருஷ்ண பிள்ளை 1962 முதல் 1967 வரை அரசியலிருந்து விலகி இருந்தார், பின்னர் மீண்டும் தனது ஆதரவாளருடன் 1969 ல் மீண்டும் புதுப்பித்து இந்திரா காந்தியுடன் இணைந்து கே காமராஜ் எதிராகப் பணியாற்றினார். இவர் தனது 63 வயதில் 1974ஆம் ஆண்டு காலமானார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

முன்னர்
சையத் நியாமத்துல்லா
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1944-1945
பின்னர்
ந. சிவராஜ்
"https://tamilar.wiki/index.php?title=ம._இராதாகிருஷ்ண_பிள்ளை&oldid=27438" இருந்து மீள்விக்கப்பட்டது