மோகனூர் ஊராட்சி ஒன்றியம்
மோகனூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மோகனூர் ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மோகனூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 83,682 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,129 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 67 ஆக உள்ளது. [1]
ஊராட்சி மன்றங்கள்
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]
- அந்தப்புரம்
- அணியாபுரம்
- அரசநத்தம்
- அரியூர்
- அரூர்
- சின்னபெத்தம்பட்டி
- கே. புதுப்பாளையம்
- கள்ளிப்பாளையம்
- குமாரபாளையம்
- லத்துவாடி
- மடக்காசம்பட்டி
- மணப்பள்ளி
- என். புதுப்பட்டி
- நஞ்செய் இடையர்
- ஓலப்பாளையம்
- ஒருவந்தூர்
- பரளி
- பெரமாண்டபாளையம்
- பெட்டபாளையம்
- ராசிபாளையம்
- எஸ். வாழவந்தி
- செங்கப்பள்ளி
- தொழுலூர்
- வலயப்பட்டி
- கொமாரிபாளையம்
வெளி இணைப்புகள்
- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்