மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில்

எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 24வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:எதிர்கொள்பாடி மேலைத் திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:எதிர்கொள்பாடி[1]
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்
தாயார்:சுகந்த குந்தளாம்பிகை, மலர்க்குழல்மாது
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

அமைவிடம்

சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ளது. நடைமுறையில் "மேலக் கோயில்" என்றே வழங்கப்படுகின்றது.[2][3]

கோயில் அமைப்பு

நுழைவாயில் கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. கோயில் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது. உள்ளே செல்லும்போது அடுத்தடுத்து ஒரே நேர்கோட்டில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாலசரஸ்வதி சன்னதிகள் அமைந்துள்ளன. உள்ளே கோயிலின் வலப்புறம் மலர்குழல்நாயகி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதி கோஷ்டத்தில் ஜெயதுர்க்கை, குருபகவான் எனப்படுகின்ற தட்சிணாமூர்த்தி உள்ளனர். கருவறை திருச்சுற்றில் சொர்ண பைரவர், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. அதை அடுத்து இரு பானங்களும், ஒரு லிங்கத்திருமேனியும் காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். திருச்சுற்றில் நடராஜர் சன்னதி உள்ளது. அருகே ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

சிறப்புகள்

ஐராவதம் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை.

குடமுழுக்கு

இக்கோயில் 20 ஆகஸ்டு 1962, 22 ஆகஸ்டு 2004 மற்றும் 3 மார்ச் 2016 ஆகிய நாள்களில் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=307
  2. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=304
  3. "திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!", தினமலர், பார்க்கப்பட்ட நாள் 2024-04-16

வெளி இணைப்புகள்