மேற்கு ஆப்பிரிக்கக் கடற்குதிரை

மேற்கு ஆபிரிக்கக் கடற் குதிரை (ஹிப்போகாம்பஸ் அல்கிரிகஸ்=Hippocampus algiricus )[2] என்பது சைனாத்திடே (கடற்குதிரை மற்றும் கடல் கொவிஞ்சி) குடும்பத்தில் உள்ள மீன் வகைகளுள் ஒன்று. இது கிழக்கு மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் அங்கோலா, பெனின், ஐவரி கோஸ்ட், காம்பியா, கானா, கினியா, லைபீரியா, நைஜீரியா, சாவோ டோமே மற்றும் பிரின்சிப், செனகல் மற்றும் சியரா லியோன் மற்றும் கேனரி தீவுகளில் காணப்படுகிறது. அல்ஜீரியாவிலிருந்து எந்தக் கடல் குதிரை குறித்து எந்த பதிவும் இல்லை என்றாலும் கைசினாட், இது 1850ல் பீஜாயாவிலிருந்து சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் தவறான இடம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்.[1]

மேற்கு ஆப்பிரிக்கக் கடற்குதிரை
பாதுகாப்பு நிலை
அறிவியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: ஆக்டினோப்டெரிஜி
வரிசை: சைனோத்திபார்ம்ஸ்
குடும்பம்: Syngnathidae
பேரினம்: ஹிப்போகாம்பஸ்
சிற்றினம்:
H. அல்கிரிகஸ்
இருசொற் பெயரீடு
ஹிப்போகாம்பஸ் அல்கிரிகஸ்

Kaup, 1856
வேறு பெயர்கள்
  • Hippocampus deanei Duméril, 1857
  • Hippocampus kaupii Duméril, 1870
  • Hippocampus punctulatus Kaup, 1856

பாதுகாப்பிற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கடற்குதிரைகள் குறித்த குறைவான தகவல்களே உள்ளன. வடகிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரான் கனேரியா தீவிலிருந்து மேற்கு ஆப்பிரிக்கக் கடற்குதிரை குறித்த முதல் பதிவு வெளியிடப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்கக் கடற்குதிரை என்பது கேனரி தீவுகளில் பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு கடற்குதிரை இனமாகும்.[3]

இந்த கடற்குதிரையானது முதன்முதலில் 2010ல் காணொளிப் பதிவு செய்யப்பட்டது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் கடற்குதிரை வர்த்தகம் குறித்த இலண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் லண்டன் விலங்கியல் சங்கம் (இசட்எஸ்எல்) இடையிலான கூட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. சீனாவின் பாரம்பரிய மருத்துவ பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்யப்படும் கடல் குதிரைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இது ஆண்டு ஒன்றிற்கு 600,000 கடற்குதிரைகளாக அதிகரித்துள்ளது. இதனுடைய எண்ணிக்கை, வாழ்விடம் அல்லது வாழ்க்கைச் சுழற்சி குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறித்து அறிவியலாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.[4]

டாக்டர் அமண்டா வின்சென்ட் இயக்குநராகச் செயல்பட்ட கடற்குதிரை திட்டத்தின் காரணமாக, 2002ஆம் ஆண்டில் கடற் வணிகத்திற்கான சர்வதேச வர்த்தக கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்ட ஆபத்தான உயிரினங்களின் வர்த்தகத்திற்கான மாநாடு (CITES) கடற்குதிரை வணிகத்திற்குக் கட்டுப்பாடுகளை விதித்தது.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Pollom, R. (2017). "Hippocampus algiricus". IUCN Red List of Threatened Species. 2017: e.T41007A54907846. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T41007A54907846.en.
  2. Scales, Helen (2009). Poseidon's Steed: The Story of Seahorses, From Myth to Reality. Penguin Publishing Group. பக். 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-101-13376-7. https://books.google.com/books?id=4Wifibfq2rMC&pg=PT136. பார்த்த நாள்: 9 June 2019. 
  3. Otero-Ferrer, F.; Herrera, R.; López, A.; Socorro, J.; Molina, L.; Bouza, C. (2015-09-13). "First records of Hippocampus algiricus in the Canary Islands (north-east Atlantic Ocean) with an observation of hybridization with Hippocampus hippocampus". Journal of Fish Biology 87 (4): 1080–1089. doi:10.1111/jfb.12760. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1112. பப்மெட்:26365616. 
  4. Project seahorse: first ever video footage of elusive West African seahorse பரணிடப்பட்டது 2015-09-14 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2012-11-01.
  5. Cisneros-Montemayor, AM; West K; Boiro IS; Vincent ACJ (2015). "An assessment of West African seahorses in fisheries catch and trade". Journal of Fish Biology 88 (2): 751–759. doi:10.1111/jfb.12818. பப்மெட்:26676971. http://www.projectseahorse.org/research-publications/2016/1/11/an-assessment-of-west-african-seahorses-in-fisheries-catch-and-trade.  Abstract.