முயல் (சீன சோதிடம்)
முயல் சீன சோதிடத்தின் நான் காவது குறி ஆகும். 1927, 1939, 1951, 1963, 1975, 1987, 1999, 2011, 2023, 2035 ஆகிய வருடங்கள் முயல் வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அமைதியும், கலை நயமும், நீண்ட ஆயுளும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
பெயர்க்காரணம்
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி ஆகியவற்றை தொடர்ந்து முயல் நான் காவதாக வந்தது. வலு குறைவான பிராணியாக இருந்தபோதும், ஆற்றின் குறுக்கே இருந்த பாறைகள் மற்றும் மரக்கட்டைகள் ஆகியவற்றின் மீது தாவித்தாவியே சுலபமாக முயல் நான்காவது இடத்திர்க்கு வந்தது. இதனால் முயலை கடவுள் நான்காவது வருடக்குறியாக அறிவித்தார்.
முயல் நான்காவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
இயல்புகள்
நேரம் | காலை 5:00 முதல் 7:00 வரை |
உரிய திசை | கிழக்கு |
உரிய காலங்கள் | வசந்த காலம் (மார்ச்) |
நிலையான மூலகம் | மரம் |
யின்-யான் | யின் |
ஒத்துப்போகும் விலங்குகள் | பன்றி, நாய், ஆடு |
ஒத்துப்போகாத விலங்குகள் | சேவல், எலி |
இராசி அம்சங்கள்
இராசி எண்கள் | 1, 3, 5, 9, 15, 19, 35 |
இராசி நிறம் | பச்சை, வெளிர் மயில் பச்சை |
இராசிக் கல் | அக்வா மரின் |
முயல் வருடத்தைய பிரபலங்கள்
முயல் வருடத்தில் உதயமான நாடுகள்
இதையும் பார்க்கவும்
உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள்
- Another Rabbit zodiac site
- Tarot.com profile
- Rabbit Chinese Star sign
- Rabbit compatibility page பரணிடப்பட்டது 2009-08-28 at the வந்தவழி இயந்திரம்
- Chinese Zodiac பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்