முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது (Dr. George Grierson Award, தேவநாகரி: डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार) இந்தியாவின் நடுவண் அரசின் மனிதவளத் துறையின் கீழுள்ள கேந்திரிய இந்தி சன்சுதான் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வண்ணம் மிக உயரிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் ஓர் விருதாகும். இது முகனையாக வெளிநாடுகளில் இந்திமொழி ஆக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது
डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार
விருது குறித்தத் தகவல்
பகுப்பு இந்தி மொழி ஊக்குவிப்பு (1-2 நபர்கள்)
நிறுவியது 1989
முதலில் வழங்கப்பட்டது 1994
கடைசியாக வழங்கப்பட்டது 2007
மொத்தம் வழங்கப்பட்டவை 15
வழங்கப்பட்டது கேந்திரிய இந்தி சன்சுதான், இந்திய அரசு
விவரம் இலக்கிய விருது
முதல் வெற்றியாளர்(கள்) முனைவர். லோதர் லுட்சு
கடைசி வெற்றியாளர்(கள்) பேரா. தனுதா இசுடாசிக்

வரலாறு

1989ஆம் ஆண்டு மொழியியலாளர் முனைவர் ஜார்ஜ் ஆபிரகாம் கிரீர்சன் நினைவாக இது நிறுவப்பட்டது. முதல் விருது 1994ஆம் ஆண்டு முனைவர் லோதர் லுட்சுவிற்கு வழங்கப்பட்டது.

விருதுகள்

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருதுகள் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் வெளிநாட்டில் இந்தியை வளர்த்தமைக்காகவும் இந்தியில் ஆய்வுக்கட்டுரைகள் வடித்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.

வெளியிணைப்புகள்